தமிழ்நாடு பாஜக தலைவர் முருகன் நேற்று(டிச.5) தஞ்சாவூர் மாவட்டம் கல்லணைக்கு வந்த முருகன் காவிரி அம்மனுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்ததோடு காவிரி ஆற்றில் மலர் தூவி மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்கள் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள் குறித்து பாஜக சார்பில் பல்வேறு கருத்தரங்கு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மத்திய நிதி அமைச்சர், அண்மையில் சென்னையில் அனைத்து வேளாண் சங்க நிர்வாகிகள், பிரதிநிதிகளை அழைத்து சட்டத்திலுள்ள நன்மைகள் குறித்து விளக்கியுள்ளார்.
பாஜக மாநில அணி, மாவட்ட விவசாய அணியை சேர்ந்தவர்கள் தொடர்ந்து வேளாண் சட்டம் குறித்து கோயம்புத்தூர் தொடங்கி டெல்டா உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர்.
இருந்தாலும் இன்னும் அதிகப்படியாக மக்களிடம் வேளாண் சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டிய சூழ்நிலை இருப்பதால் வரும் 8ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் மாவட்டந்தோறும் விவசாயிகளை சந்தித்து விளக்கும் தரும் இயக்கத்தை தொடங்கவுள்ளோம் என தெரிவித்தார்.
இந்த விழாவில், மாநில துணை தலைவர்கள் கருப்பு முருகானந்தம், நரேந்திரன், மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன், செயற்குழு உறுப்பினர் பாலாஜி சிவராஜ், முன்னாள் தேசிய செயலாளர் எச் ராஜா, தஞ்சை மாவட்டத் தலைவர்கள் சதீஷ், இளங்கோ, மாவட்ட பொது செயலாளர் பூண்டி வெங்கடேசன், திருச்சி மாவட்ட தலைவர் சுசீலா, அந்தநல்லூர் மண்டல் தலைவர் அழகர்சாமி உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு: கருப்பு கொடி ஏந்தி களத்தில் இறங்கிய திமுக!