ETV Bharat / state

''கூடுதல் பணம் வாங்காமல் இருக்க முடியவில்லை'' - டாஸ்மாக் ஊழியர்கள் புலம்பல்! - viral video

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில், அரசு டாஸ்மாக்கில் மது பாட்டிலுக்கு கூடுதல் தொகை வாங்குவது தொடர்பாக டாஸ்மாக் கடை ஊழியர் ஒருவர் பேசும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

‘கூடுதல் பணம் வாங்காமால் இருக்க முடியவில்லை’ - டாஸ்மாக் ஊழியர்கள் புலம்பல்!

author img

By

Published : Jul 22, 2023, 4:03 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், அரசு டாஸ்மாக்கில் மது பாட்டிலுக்கு கூடுதல் தொகை வாங்குவது தொடர்பாக டாஸ்மாக் கடை ஊழியர் ஒருவர் பேசும் வீடியோ

தஞ்சாவூர்: தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்பனையாகும் மது பாட்டிலுக்கு கூடுதலாக பத்து ரூபாய் வசூலிக்கப்படுவதாகத் தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது. இந்த நிலையில், கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மதுபானக் கடையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில், ''மாத சம்பளம் 9 ஆயிரம் ரூபாய் என்பது போதுமானதாக இல்லை. அரசு நிர்ணயிக்கும் தொகையைக் காட்டிலும் கூடுதல் கடை வாடகையை, நாங்கள்தான் எங்கள் சொந்த பணத்தில் இருந்து செய்ய வேண்டி உள்ளது. அதுமட்டுமின்றி, மின் கட்டணம் 3 ஆயிரம் ரூபாய்தான் அரசு வழங்குகிறது.

ஆனால், பிரீசர் பாக்ஸ் பயன்பாட்டால் மின் கட்டணம் 15 முதல் 18 ஆயிரம் ரூபாய் வருகிறது. இதற்கும் நாங்கள்தான் எங்கள் கையில் இருந்து செலவழிக்கிறோம். அடுத்து கடைகளை சுத்தமாகப் பராமரிக்க உயர் அலுவலர்கள் உத்தரவு காரணமாக அதற்கு தூய்மைப் பணியாளரை சம்பளத்திற்கு நியமித்தும், சில நேரங்களில் வாடிக்கையாளர்கள் போடும் குப்பை மட்டுமல்லாமல், அவர்கள் எடுத்த வாந்திகளைக் கூட நாங்களே சுத்தம் செய்ய வேண்டியுள்ளது.

மேலும், கடைக்கு வரும்போதும், வந்த பிறகும் இயற்கையாகவே பாட்டில்கள் வெடிக்கிறது. இதன் நஷ்டத்தை நாங்கள்தான் ஏற்க வேண்டிய நிர்பந்தம். இது தவிர, குறைந்த சம்பளத்தில் எப்படி எங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற முடியும்? குழந்தைகளை எப்படி படிக்க வைக்க முடியும்? எங்களுக்கு விருப்பம் இல்லாமல்தான் வேறு வழியின்றி 10 ரூபாய் பிச்சை எடுக்க வேண்டிய நிர்பந்தம் உள்ளது. பணி நிரந்தரம் செய்து கூடுதல் சம்பளம் கொடுத்தால் இது போன்ற காரியத்தில் நாங்கள் ஏன் ஈடுபடப்போகிறோம்.

தற்போது உயர் அலுவலர்கள் உத்தரவு காரணமாக கடந்த 4 நாட்களாக கூடுதலாக 10 ரூபாய் பிச்சை எடுப்பதை நிறுத்தி விட்டோம். இருப்பினும், எங்கள் கூடுதல் செலவுகளை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்பது எங்களுக்கே தெரியவில்லை” என தெரிவித்து உள்ளார்.

முன்னதாக, ஒவ்வொரு மது பாட்டிலின் ரகத்திற்கு ஏற்றார் போன்று குறிப்பிட்ட தொகையை கூடுதலாக வைத்து விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனிடையே, மதுபானக் கடைகளில் மது பாட்டிலுக்கு நிர்ணயித்த விலையைவிட கூடுதலாக 10 ரூபாய் அல்லது அதற்கு மேல் வசூலித்தால் ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவர் என டாஸ்மாக் நிர்வாக இயக்குநர், டாஸ்மாக் மாவட்ட மேலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ‘டாஸ்மாக் கடைகளில் 10 ரூபாய் கூடுதலாக வாங்குவதை தடுக்க நடவடிக்கை’ - அமைச்சர் முத்துசாமி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.