ETV Bharat / state

கும்பகோணம் மாமன்ற கூட்டத்தில் பரபரப்பு..! காங்கிரஸ் மேயருடன் திமுக துணை மேயர் மோதல்..! - Kumbakonam mayor

Kumbakonam Corporation: கும்பகோணம் மாமன்ற கூட்டத்தில் தீர்மானங்களை உடனடியாக நிறைவேற்றக் கோரி மேயரை வெளியேற விடாமல் தடுத்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட துணை மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 29, 2023, 6:26 PM IST

கும்பகோணம் மேயர் - துணை மேயர் இடையே மோதல்

தஞ்சாவூர்: கும்பகோணம் மாநகராட்சியில் மொத்தமுள்ள 48 மாமன்ற உறுப்பினர்களில், திமுக 39, காங்கிரஸ் 2, அதிமுக 3, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஐயூஎம்எல், விசிக தலா ஒன்று என்ற ரீதியில் உள்ளனர். இந்நிலையில், இன்று (டிச.29) மாநகராட்சி மாமன்ற கூட்டம், பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள படேல் மண்டபத்தில், மேயர் கே.சரவணன் (காங்) தலைமையிலும், துணை மேயர் சு.ப.தமிழழகன் (திமுக) மற்றும் ஆணையர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் விசிக மாமன்ற உறுப்பினர் ரூபின்ஷா அலெக்ஸ் மட்டும் பங்கேற்கவில்லை. இந்த கூட்டத்தில் மொத்தம் 43 பொருட்கள் விவாதத்திற்கு வைக்கப்பட்டு இருந்தது. சென்னை மற்றும் தூத்துக்குடி புயல், மழை வெள்ள காலத்தில் சிறப்பாக செயல்பட்ட தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்களுக்கும், ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்கியமைக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து நேற்று (டிச.28) மறைந்த கேப்டன் விஜயகாந்த் மற்றும் விடுதலை போராட்ட வீரரும், முதுபெரும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவருமான என்.சங்கரய்யா மறைவிற்கும் 2 நிமிடம் மௌனம் காத்தும், இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து கூட்டத் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன.

தாராசுரம் காய்கறி அங்காடி தரைக்கடைகள் வாடகையினை, சதுர அடிக்கு ரூ.5 ஆக உயர்த்த இருந்த நிலையில், தரைக்கடை வணிகர்கள் வேண்டுகோளின் படி, அதனை ரூ.3.65 ஆக திருத்தி நிர்ணயம் செய்யப்பட்டு, அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது, துணை மேயர் சு.ப.தமிழழகன் (திமுக) இக்கூட்டத்தில் வைத்து, ஆணையரால் கையெழுத்திடப்பட்டு வழங்கப்பட்ட விவாதப் பொருட்களில், 19 பொருட்களை சேர்க்காமல் நிறுத்தி வைக்கப்பட்டதன் காரணம் என்ன? என கேள்வி எழுப்பி, அதற்கு விளக்கம் தர வேண்டும் எனக் கூறினார்.

மேலும், இந்த 19 பொருட்களும் பொதுமக்கள் சேவைக்கு அத்தியாவசியமான பணி என்றும் இதனை நிறுத்தி வைப்பதன் மூலம் ஆட்சிக்கு கெட்டப் பெயர் ஏற்படக் காரணமாக அமையும் எனவும் தெரிவித்தார். அப்போது, இதற்கு பதில் அளித்த மேயர் கே.சரவணன், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரூ.3 கோடியே 12 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான 19 தீர்மானங்களும் பரிசீலனையில் உள்ளது.

பரிசீலனை செய்து முடித்த பிறகு, அடுத்த கூட்டத்தில் அவை கொண்டு வரப்படும் என்றார். இதையடுத்து, இன்று இக்கூட்டம் நிறைவடைந்தது எனக் கூறி, கூட்டத்தை விட்டு வெளியேற முயன்றார் மேயர். அப்போது மேயரைக் கண்டித்து மாமன்ற உறுப்பினர்கள் முழக்கமிட்டதுடன், விடுபட்ட 19 தீர்மானங்களையும் நிறைவேற்றினால் தான் வெளியேற அனுமதிப்போம் எனவும் கூறினர்.

அதைத் தொடர்ந்து, மேயரை வெளியேற விடாமல் தள்ளிய துணை மேயர் சு.ப.தமிழழகன், முற்றுகை போராட்டத்தை தொடங்கினார். இதையடுத்து திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட், ஐயூஎம்எல், காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர்களும் அவரை வழிமறித்து, கூட்ட அரங்கிலேயே முற்றுகையிட்டு அமர்ந்தனர். ஆனால் இந்த முற்றுகையில் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் மூன்று பேரும் பங்கேற்கவில்லை. மேலும், கூட்டத்தை விட்டு வெளியேறினர்.

சுமார் 3 மணி நேரம் வரை நீடித்த இந்த முற்றுகைப் போராட்டத்தினைத் தொடர்ந்து, துணை மேயர் தலைமையிலான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி மாமன்ற உறுப்பினர்கள் 42 பேரும், போராட்டத்தை நிறுத்தி கூட்ட அரங்கில் இருந்து மேயர் வெளியேற அனுமதித்தனர்.

பின்னர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட துணை மேயர் தலைமையிலான மாமன்ற உறுப்பினர்கள், சென்னையில் உள்ள மாநகராட்சி நிர்வாக ஆணையருக்கு முகவரியிட்டு, அதனை மாநகராட்சி ஆணையர் லட்சுமணன் வழியாக விடுபட்ட தீர்மானங்களை நிறைவேற்றித் தருமாறு கோரிக்கை விடுத்து மனு அளித்தனர். இதையடுத்து, போராட்டமானது முடிவுற்றது.

கும்பகோணம் மாநகராட்சியை பொருத்தவரை மேயர், துணை மேயர் இடையே இலைமறை, காய்மறையாக இருந்த மோதல், இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த மோதல் திமுக - காங்கிரஸ் கூட்டணி, எந்த அளவிற்கு நெருங்கி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இணைந்து வாக்கிற்காக கும்பகோணம் மாநகர வாக்காளர்களை சந்திப்பார்கள் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

மேலும், துணை மேயர் பேசும் போது, மேயர் தமிழக அரசிற்கு கெட்டப் பெயர் ஏற்படும் வகையில் செயல்படுகிறார் என்றும் தன்னிச்சையாக செயல்படுகிறார் எனவும் குற்றம்சாட்டினார். அதுபோல மேயரும், திமுக தரப்பில் இருந்து பலரும் தன்னை தீர்மானங்கள் நிறைவேற்றுவது உள்ளிட்ட பல விஷயங்களில் மிரட்டுவதாகவும், வற்புறுத்துவதாகவும் குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ‘எனக்கும் பசிக்கும்ல..’ ஹாயாக சாப்பிட்டு நீர் அருந்தும் யானையின் வைரல் வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.