ETV Bharat / state

கும்பகோணம் தீ விபத்து 17ஆம் ஆண்டு நினைவுத் தினம்- பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி!

கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 17ஆம் ஆண்டு நினைவுத் தினத்தையொட்டி பள்ளி முன்பு வைக்கப்பட்டுள்ள இறந்த குழந்தைகளின் புகைப்படங்களின் முன்பு பெற்றோர் மற்றும் அவர்களது உறவினர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

kumbakonam-fire-accident-day
kumbakonam-fire-accident-day
author img

By

Published : Jul 17, 2021, 6:10 AM IST

கும்பகோணம் : காசிராமன் தெருவில் இயங்கி வந்த ஸ்ரீ கிருஷ்ணா தனியார் பள்ளியில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி பயங்கர தீ விபத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி பலியாகினர்.

18 குழந்தைகள் படுகாயம் அடைந்து இன்றளவும் அதன் பாதிப்பிலிருந்து மீளாமல் உள்ளனர். நாட்டையே உலுக்கிய இந்தத் துயர சம்பவத்தில் 17ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று (ஜூலை 16) அனுசரிக்கப்பட்டது. தீ விபத்து நடந்த பள்ளி முன்பு வைக்கப்பட்டுள்ள இறந்த 94 குழந்தைகளின் புகைப்படங்களுக்கு முன்பு பெற்றோர் அஞ்சலி செலுத்தினர். மேலும் குழந்தைகளுக்கு பிடித்த தின்பண்டங்கள், புத்தாடைகளை வைத்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து கும்பகோணம் பழைய பாலக்கரையில் தமிழ்நாடு அரசு சார்பில் இறந்த 94 குழந்தைகளின் நினைவாக வைக்கப்பட்டுள்ள நினைவு ஸ்தூபி, குழந்தைகளின் கல்லறைகளில் மலர் தூவியும் மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் தலைமை கொறடா கோவி செழியன், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல், திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

கண்ணீர்
விபத்தில் இறந்த குழந்தைகளின் பெற்றோர், உறவினர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்கள் ஏராளமானோர் கனத்த இதயத்தோடு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 17 ஆண்டுகளாக ஜூலை 16ஆம் தேதி கும்பகோணம் தீ விபத்தில் இறந்த குழந்தைகள் நினைவுத் தினத்தை குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து வருவதாகவும் தற்போது உள்ள தமிழ்நாடு அரசு இன்னும் இரண்டு மாத காலத்திற்குள் அதனை அறிவிக்க வேண்டும் என குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: தீ விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.