தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் பூதலூர் தெற்கு ஒன்றியத்தில், 'கழகத் தலைவர் தளபதிக்கு' என்ற தலைப்பில் ஒரு போஸ்டர் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது. இதில் கழகத்தின் கிளைச் செயலாளர் பொறுப்புக்கு ஒரு கோடி இருந்தால்தான் வரமுடியும் என்பது போன்ற சர்ச்சைக்குரிய கருத்துகள் இடம்பெற்றுள்ளன.
இந்தக் கருத்தை ஒன்றிய செயலாளர் சொல்கிறார், அது உண்மையா? என்றும் கிளைச் செயலாளர் பதவிகளை பூதலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் விலைபேசி விற்கும் நிலை தலைமைக்கு தெரியுமா என்றும் அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பூதலூர் தெற்கு ஒன்றியத்தில் 32 கிளைகளைப் பதிவுசெய்யாமலும், பல கிளைச் செயலாளர் பதவிகளை எடுத்தும், கட்சி நடத்தும் ஒன்றிய செயலாளருக்கு ஆதரவாக இருப்பதும் திருவையாறு சட்டப்பேரவை உறுப்பினரா? என அதில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மேலும், ஒன்றிய செயலாளர் மீது தலைமைக்குப் பல புகார்கள் அனுப்பியும் அவர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் எனவும், இவரின் செயல்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியுமா என்றும் கட்சிக்காரர்கள் இடத்தில் அவப்பெயர் எடுத்து தன்னிச்சையாக செயல்படும் அவரை மாற்றி புதிய வரை பொறுப்புக்கு அறிவிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்த போஸ்டரில் இறுதியாக இவண் பாதிக்கப்பட்ட, பாவப்பட்ட கழக தொண்டர்கள் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க:‘தலைவா வா! தலைமை ஏற்க வா!!’ - ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக சுவரொட்டி