ETV Bharat / state

ஹெலிகாப்டர் சகோதரர்கள் மோசடி: காவலர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஐஜி பாலகிருஷ்ணன் பதில் - helicopter brothers

தஞ்சாவூர்: ஹெலிகாப்டர் சகோதரர்கள் மோசடி புகாரில் காவல் துறையினர் மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது தொடர்பான கேள்விக்கு, புலன் விசாரணையில் வரும் அனைத்தும் விசாரிக்கப்படும் என திருச்சி மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஹெலிகாப்டர் சகோதரர்கள் மோசடி
ஹெலிகாப்டர் சகோதரர்கள் மோசடி
author img

By

Published : Aug 11, 2021, 10:05 AM IST

Updated : Aug 11, 2021, 10:14 AM IST

தஞ்சை காவல்துறை துணைத் தலைவர் அலுவலகத்தில் ஆரம்ப காலத்தில் காவலர்கள் பயன்படுத்திய பழமை வாய்ந்த பொருள்களை காட்சிப்படுத்தும் வகையில் கண்காட்சி அமைப்பதற்கான பணிகளை முன்னதாக திருச்சி மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

போலீஸ் கஸ்டடியில் விசாரணை

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஹெலிகாப்டர் சகோதரர்கள் மோசடி குறித்து இதுவரை மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்னும் புகார்கள் வந்துள்ளன. அவை தொடர்பாகவும் விசாரணை செய்து வருகிறோம். போலீஸ் கஸ்டடியில் எம்.ஆர்.கணேசனை எடுத்து விசாரணை செய்து வருகிறோம்.

மக்கள் இழந்த பணத்தை பறிமுதல் செய்வதற்கும், அந்தப் பணத்தை அவர்கள் எந்தெந்த வழியில் என்ன செய்திருக்கிறார்கள் என்பது குறித்தும் புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் விசாரணை முடித்து குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்வோம்.

காவல் துறையினர் மீதான புகார்கள்

இதுவரை 20 கோடி ரூபாய் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளோம். மேலும் 15 கோடி ரூபாய் மோசடி குறித்து புகார்கள் வந்துள்ளன. அது தொடர்பான முதற்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.

ஹெலிகாப்டர் சகோதரர்கள் மோசடியில் காவல் துறையினர் மீது எழுந்துள்ள புகார்கள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த பாலகிருஷ்ணன், புலன் விசாரணையில் என்னென்ன வருகின்றனவோ அவை அனைத்தையும் விசாரிப்போம்" எனத் தெரிவித்தார்.

ஹெலிகாப்டர் சகோதரர்கள்
ஹெலிகாப்டர் சகோதரர்கள்

யார் இந்த ஹெலிகாப்டர் சகோதரர்கள்...
கும்பகோணத்தில் நிதி நிறுவனம், பால் பண்ணை உள்ளிட்டவற்றை நடத்தி பொது மக்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாகக் கைது செய்யப்பட்டவர்கள் ஹெலிகாப்டர் சகோதரர்கள் என அழைக்கப்படும் எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதன். ஆகஸ்ட் 19ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் இவர்கள் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஹெலிகாப்டர் சகோதரர்களை சிறையில் அடைக்க உத்தரவு

Last Updated : Aug 11, 2021, 10:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.