தஞ்சாவூர்: தஞ்சாவூரில் இருந்து திருக்கருக்காவூர் வழித்தடத்தில் 34A என்ற அரசு பேருந்து இயங்கி வருகிறது. இந்த பேருந்தில் மூதாட்டி ஒருவர் மெலட்டூரில் ஏறி தஞ்சாவூருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் மீண்டும் அதே பேருந்தில் திரும்பி ஏறியுள்ளார். இதற்கு நடத்துனர் அந்த மூதாட்டியிடம், 'காசு ஓசி என்றால் போயிட்டு போயிட்டு வருவியா?' எனக் கேட்டுள்ளார்.
இதற்கு அந்த மூதாட்டி, 'காசு ஓசி என்று நான் போகவில்லை என்றும், ஏன் தம்பி கோபமாக இப்படி பேசுகிறாய்’ என கேட்டுள்ளார். இந்த காட்சிகளை அங்கு இருந்த சக பயணி ஒருவர், தனது செல்போனில் படம் பிடித்த நிலையில் அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது.
இந்நிலையில், சம்பந்தபட்ட அரசு பேருந்து நடத்துனரை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட பொது மேலாளர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து இன்று (டிச.16) உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஓசி டிக்கெட் வீடியோ விவகாரம்; பாட்டி மீது வழக்கு இல்லை