தஞ்சாவூர்: பிரதமர் நரேந்திர மோடியின் ஒன்பது ஆண்டு கால சாதனையாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது, இதனையடுத்து அந்தத் திட்டங்களில் பயன்பெற்றவர்களின் வீடுகளுக்கு சென்று பயனாளிகளின் கருத்துக்களை, பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் கேட்டறிந்து வருகின்றனர். மேலும் பாஜகவின் சாதனைகளை விளக்கி பிரச்சார இயக்கம், கூட்டம் ஆகியவற்றை நிர்வாகிகள் நடத்தி வருகின்றனர்.
அதே போல் தஞ்சாவூரில் பாரதிய ஜனதா கட்சி முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம், மாவட்டத் தலைவர் ஜெய்சதீஷ் உள்ளிட்டோர் பயனாளிகளின் இல்லத்திற்கு சென்று பிரதமரின் திட்டங்களால் பயன் பெற்றது குறித்து ஆட்டோ ஓட்டும் பெண்மணி, உடல் நலக்குறைவால் மறுவாழ்வு பெற்ற பெண்மணி மற்றும் ஜெராக்ஸ் கடை நடத்தி வரும் பெண்மணி ஆகியோரிடம் கருத்துக்களை கேட்டறிந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பொன்.ராதாகிருஷ்ணன் கூறும் போது, ”பிரதமர் நரேந்திர மோடி ஒன்பது ஆண்டு கால ஆட்சியில் நாட்டில் வாழுகின்ற 140 கோடி மக்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொண்டு அனைத்து திட்டங்களையும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்திருக்கிறார். கடந்த ஒரு மாத காலமாக நாடு முழுவதும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
பீகாரில் எதிர்க்கட்சிகள் கூட்டம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், கூடி கலைவது அவர்களது பொழுதுபோக்கு. கூட்டம் முடிந்ததும் தமிழ்நாடு முதலமைச்சர் கூறும் போது, கூட்டணி அமைத்து ஒன்றாக போட்டி போடுவோம், அல்லது இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நாங்கள் போட்டி இடுவோம், அல்லது பொது வேட்பாளரை நாங்கள் நிறுத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.
நான்காவதாக ஸ்டாலின் அவர் மனதில் இருந்தது தான் சொல்ல வேண்டிய விஷயம், கூடினோம் கலைந்தோம், நண்பர்களாகவே பிரிந்தோம் என்றும், தமிழ்நாடு முதலமைச்சர் திமுக நாங்கள் குடும்ப ஆட்சி தான் நடத்துவோம் என்று தெரிவித்துள்ளார். இதை சொல்லியவர் பேரறிஞர் அண்ணா, அண்ணாவின் குடும்பம் எங்கு உள்ளது, சிட்டிபாபு, ஆலடி அருணா குடும்பம் எங்கு உள்ளனர்.
இதுதான் குடும்ப அரசியலா என்று கேள்வி எழுப்பினார். சிதம்பரத்தில் கனக சபை மேடையில் பலமுறை தரிசனம் செய்துள்ளேன். சில சூழ்நிலைகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அது பேசி முடிவு எடுக்க வேண்டிய விஷயம், அதில் அரசியல் பண்ண வேண்டிய வேலை இருக்க கூடாது. தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடையை மூடிவிட்டால் அன்றுடன் தமிழ்நாடு அரசாங்கத்தின் மூடுவிழா நடக்கும்” என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: ஹெலிகாப்டர் பிரதர்ஸ் நிதி மோசடி... லஞ்சம் வாங்கிய காவலர்கள் மீது வழக்குப்பதிவு