தஞ்சாவூர்: கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில், தஞ்சையில் காலை முதல் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிர விட்டுச் செல்கின்றன.
மேலும் இந்த கடுமையான பனிமூட்டத்தால் உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயில் முற்றிலும் மறைந்து காணப்படுகிறது. தற்போது சபரிமலை சீசன் என்பதால், தஞ்சைக்கு ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சுற்றுலாவுக்கு வருகை தருகின்றனர்.
இந்நிலையில், பனி மூட்டத்தால், பெரிய கோயிலின் அழகை ரசிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். இதைப் போல் தஞ்சையை சுற்றியுள்ள பகுதிகளிலும் கடும் பனிமூட்டம் காணப்படுகிறது.
இதையும் படிங்க: சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!