ETV Bharat / state

பயனற்றுக் கிடக்கும் அதிராம்பட்டினம் துறைமுகம்: சீரமைக்க மக்கள் கோரிக்கை! - adirampattinam beach

தஞ்சாவூர்: பழுதடைந்து பயனற்றுக் கிடக்கும் அதிராம்பட்டினம் கப்பல் துறைமுகத்தை மீண்டும் சீரமைத்துக்கொடுக்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

athirapadinam
author img

By

Published : Oct 21, 2019, 9:58 AM IST

அதிராம்பட்டினம் கடற்கரைப்பகுதி வங்கக் கடலோரம் அமைந்த பகுதியாகும். மன்னர் காலத்திலிருந்தே மிகப்பெரிய அளவில் வணிக ரீதியாகவும் போக்குவரத்து ரீதியாகவும் இந்த துறைமுகம் நல்ல முறையில் செயல்பட்டுவந்தது.

இந்த துறைமுகம் இருந்ததால் அந்த காலத்தில் மன்னர்கள் பயன்படுத்திவந்த குதிரைகளை விற்பனை செய்ய குதிரை சந்தையும் இங்கே இருந்தது. இதனால் இங்கு குதிரைகளை கொண்டு வரவும் இங்கிருந்து சந்தையில் குதிரைகளை வாங்கி அரபு நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளுக்கு கொண்டுச்செல்லவும் துறைமுகம் பயன்படுத்தப்பட்டது.

சிங்கப்பூர், மலேசியா, மியான்மர் ஆகிய நாடுகளிலிருந்து வணிகரீதியான பல கப்பல்கள் இங்கு வந்து வியாபாரம் செய்துவந்தது. ஆங்கிலேயர் காலத்திலும் இந்த கப்பல் துறைமுகம் சிறப்பான முறையில் செயல்பட்டுவந்தது. இதனால் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பும் ஏற்பட்டு அதிராம்பட்டினம் பகுதி வணிக ரீதியாக பொருளாதரத்தில் மேன்மை அடைந்தது.

பழுதடைந்த நிலையில் உள்ள அதிராம்பட்டினம் துறைமுகம்

நாளடைவில் இந்த துறைமுகம் பழுதடைந்து பயன்பாடு இல்லாமல் போனது. இதனால் வணிகரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நன்கு உயர்ந்த நிலையில் இருந்த அதிராம்பட்டினம் பகுதி மக்கள் மற்றும் சுற்றுவட்டார மக்கள் மிகவும் பின்தங்கிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இச்சூழலில் மீண்டும் அதிராம்பட்டினம் கப்பல் துறைமுகத்தை சீரமைத்து நடைமுறைக்குக் கொண்டு வந்தால் இப்பகுதியிலுள்ள ஏராளமான இளைஞர்கள், தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்து தங்கள் வாழ்வாதாரம் உயரம் என்பதால் துறைமுகத்தை மீண்டும் சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் துறைமுகம் தூர்வாரும் பணிகள் தொடக்கம்!

Intro:அழிந்து விட்ட வணிக கப்பல் துறைமுகத்தை மீண்டும் கொண்டு வர பொது மக்கள் எதிர்பார்ப்பு

Body:தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரை பகுதி வங்கக் கடலோரம் அமைந்த பகுதியாகும் .அதிராம்பட்டினத்தில் மன்னர் காலத்திலிருந்தே கப்பல் துறைமுகம் மிகப் பெரிய அளவில் வணிக ரீதியாகவும் மற்றும் போக்குவரத்து ரீதியாகவும் செயல்பட்டு வந்தது. இந்த அதிராம்பட்டினம் பகுதியில் இந்த துறைமுகம் இருந்ததால் அந்த காலத்தில் மன்னர்கள் பயன்படுத்திவந்த குதிரைகளை விற்பனை செய்ய குதிரை சந்தையும் இங்கே இருந்தது. இதனால் இங்கு குதிரைகளை கொண்டு வரவும் இங்கிருந்து சந்தையில் குதிரைகளை வாங்கி அரபு நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளுக்கு கொண்டு செல்லவும் இந்த துறைமுகம் மிகப்பெரிய பங்கு அளித்து வந்தது. மேலும் சிங்கப்பூர், மலேசியா, மியான்மார் ஆகிய நாடுகளிலிருந்து வணிகரீதியான பல கப்பல்கள் இங்கு வந்து வியாபாரம் செய்துவந்தது .மேலும் தொடர்ந்து ஆங்கிலேயர் காலத்திலும் இந்த கப்பல் துறைமுகம் சிறப்பான முறையில் செயல்பட்டு வந்தது. இதனால் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பும் ஏற்பட்டு அதிராம்பட்டினம் பகுதி வணிக ரீதியாக பொருளாதரத்தில் மேன்மை அடைந்தது. இந்நிலையில் நாளடைவில் இந்தத் துறைமுகம் பழுதடைந்து பயன்பாடு இல்லாமல் போனது. இதனால் வணிக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நன்கு உயர்ந்த நிலையில் இருந்த அதிராம்பட்டினம் பகுதி மக்கள் மற்றும் சுற்றுவட்டார மக்கள் மிகவும் பின்தங்கிய நிலைக்கு தள்ளப்பட்டனர் .இச்சூழலில் மீண்டும் இந்த கப்பல் துறைமுகத்தை சீரமைத்து நடைமுறைக்குக் கொண்டு வந்தால் இப்பகுதியிலுள்ள ஏராளமான இளைஞர்கள் மற்றும் தொழிலாளிகளுக்கு வேலை வாய்ப்பு கிடைத்து இதன்மூலம் அவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்வதோடு பலவிதத்திலும் இப்பகுதி மேம்பாடு அடையும் என்று ஆணித்தரமாகக் கூறும் இப்பகுதி மக்கள் துறைமுகத்தை மீண்டும் சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.