ETV Bharat / state

டெல்டா விவசாயிகளின் முதுகில்  குத்திய திமுக-  ஹெச். ராஜா பலீர் - etvbharat

டெல்டா விவசாயிகளின் முதுகில் குத்தியது திமுகசான் என்றும், உண்ணாவிரத போராட்டத்திற்கு தடை விதித்தால், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் பஜகவின் முன்னாள் தேசியத் தலைவர் ஹெச். ராஜா தஞ்சாவூரில் தெரிவித்துள்ளார்.

டெல்டா விவசாயிகளின் முதுகில் குத்தியது திமுக

author img

By

Published : Aug 2, 2021, 4:55 AM IST

தஞ்சாவூரில் நேற்று (ஆக. 01) செய்தியாளர்களை சந்தித்த பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச். ராஜா, "பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருந்தபோதுதான் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு வந்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் சமூக நீதிக்காக வெளி வேஷம் போடுகிறார்கள். ஆனால், உண்மையான சமூக நீதியை செயல்படுத்திக் கொண்டிருப்பது பாஜகதான்.

வருமுன் காப்பதற்காக..

மேகேதாட்டுவில் அணைகட்ட ஒன்றிய அரசு அனுமதி கொடுக்கவில்லை, மேலும், எங்களுக்கு எந்த விண்ணப்பமே வரவில்லை எனத் தெரிவித்துள்ளது. அதனால் பயப்பட தேவையில்லை.

செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ஹெச். ராஜா

ஆனால், தமிழ்நாடு விவசாயிகளின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் தஞ்சையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது. வருமுன் காப்பதற்காகவும், இது ஒரு தடுப்பு நடவடிக்கை.

டெல்டா விவசாயிகளின் முதுகில் குத்தியது திமுக. குத்திய நபர் கருணாநிதி. உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தடை விதித்தால், தடையை மீறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம். தடை விதித்தால் விவசாயிகளின் துரோகி திமுக என்று நிரூபணம் ஆகிவிடும்.

ஆதாரம் இருக்கா?..

கல்வி, கயவர்களின் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பாடநூல் தலைவர் லியோனி, சுப. வீரபாண்டியன் உள்ளிட்ட மூவரை உடனடியாக நீக்க வேண்டும்.

மேலும், ஹெலிகாப்டர் சகோதரர்கள் வழக்கில் ஆதாரம் இருக்கா? மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக இருந்த தேஷ்முக் சேகர் சஞ்சய் மீது பல்வேறு புகார்கள் இருக்கிறது" என்றார்.

இதையும் படிங்க: 'பக்கா பட்ஜெட் ப்ளான் - அமைச்சர், அலுவலர்களுக்கு முதலமைச்சர் அட்வைஸ்!'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.