தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே சோழபுரம் அடுத்துள்ள கோவிலாச்சேரியில் சென்னையிலிருந்து தஞ்சை நோக்கி வந்த அரசு பேருந்து பேருந்து ஓட்டுநர் கட்டுபாட்டை இழந்து சாலையோரம் இருந்த வாய்க்கால் மதகு கட்டையில் மோதி கவிழ்ந்தது.
இதில் பேருந்தில் வந்த பெண்கள் உட்பட 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் பேருந்து ஓட்டுனர்
கர்ணாமூர்த்தி, நடத்துனர் கார்த்திகேயன், பயணிகள் ரமேஷ், கீர்த்திகா விஜயலட்சுமி, சந்திரசேகர், தமிழ்ச்செல்வி ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டு கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து சோழபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: பல்வேறு இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணியை நடத்தி மத மோதல்களை ஏற்படுத்திட முனைகிறது பாஜக - முத்தரசன்