ETV Bharat / state

"தஞ்சையில் விரைவில் பயணிகள் விமான போக்குவரத்து.. முதற்கட்ட பணிகள் தீவிரம்" - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்! - விமான சேவை

Flight Service Soon in Thanjavur: தமிழகத்தின் வளர்ச்சிக்காக தஞ்சையில் பயணிகள் விமான போக்குவரத்து விரைவில் துவங்கப்பட உள்ளதாகவும், அதற்கான முதல் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல் தெரிவித்துள்ளார்.

flight service soon in thanjavu
தஞ்சாவூரில் விரைவில் விமான சேவை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 25, 2023, 6:37 PM IST

தஞ்சாவூரில் விரைவில் விமான சேவை

தஞ்சாவூர்: தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்ப துறையின் சூழல் அமைப்பினை மாநிலம் முழுவதும் பரவலாக விரிவுபடுத்தும் வகையில், மினி டைட்டல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் மேலவஸ்தா சாவடி அருகே 3.40 ஏக்கர் பரப்பளவில் 55 ஆயிரம் சதுர அடியில் ரூ.27 கோடியே 13 லட்சம் மதிப்பீட்டில், 4 அடுக்கு மாடி கட்டிடமாக மினி டைட்டல் பார்க் உருவாக்கிட கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகளை இன்று (நவ. 25) தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பார்வையிட்டு ஆய்வு செய்து, கட்டிட பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், "தஞ்சையில் டைட்டல் பார்க் கட்டுமானப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.

பணிகள் முடிந்தவுடன் மிகப்பெரிய நிறுவனங்கள் வரவிருக்கின்றன. குறிப்பாக டெல்டா பகுதி இளைஞர்களுக்கும், படித்து புதிய தொழில் முனைவோராக உருவாகும் இளைஞர்களுக்கும், இங்கேயே புதிய தொழில்களை துவங்கும் startup Hub ஆக திகழ இருக்கிறது. அதன் மூலம் தொழில் முனைவோருக்கும், இளைஞர்களுக்கும் மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் விவசாயத்தையோ, சுற்றுச் சூழலையோ பாதிக்கக்கூடிய தொழிற்பேட்டைகள் எதுவும், எந்த காலத்திலும் வராது. விவசாயம் சார்ந்த, சுற்றுச்சூழல் பாதிக்காத தொழிற்பேட்டைகள் மட்டுமே நிச்சயமாக கொண்டு வருவோம். டெக்ஸ்டைல் பார்க் இங்கு கொண்டு வந்தால், டையிங் இங்கு கொண்டு வர முடியாது.

அதில், துணி தயார் செய்யும் தையல் பகுதி மட்டுமே கொண்டு வந்து, வேலை வாய்ப்புகளை உருவாக்க வாய்ப்பு உள்ளது. மேலும், டெல்டாவில் தமிழகத்தின் வளர்ச்சிக்காக தஞ்சை, ஓசூர், தென் மாவட்டங்களுக்கும் வளர்ச்சிகள் செல்ல வேண்டுமென்றால், விமான நிலைய போக்குவரத்து அவசியம் ஆகிறது.

அந்த வகையில், தஞ்சையில் வாயு தூத் விமான போக்குவரத்து முன்பு இருந்தது. தற்போது இங்கு பயணிகளுக்கு விமான போக்குவரத்து விரைவில் துவங்கப்பட உள்ளது. அதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது" என்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார்.

முன்னதாக அமைச்சர் டி.ஆர்.பி ராஜா உள்ளிட்ட அலுவலர்கள் விமான நிலையத்தை பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். இந்த ஆய்வின் போது எம்.எல்.ஏக்கள் சந்திரசேகரன், நீலமேகம், மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், டைட்டல் பார்க் மேலாண்மை இயக்குநர் ஜெயச்சந்திரபானு ரெட்டி, துணை மேயர் அஞ்சுகம்பூபதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: டேட்டிங் செயலி மூலம் சீட்டிங்.. ஓரினச்சேர்க்கைக்கு ஆசைகாட்டி மோசடி செய்த கும்பல் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.