ETV Bharat / state

கொப்பரை தேங்காய்களுக்குரிய உரிய விலை வேண்டும் - தேங்காய் உடைத்து நூதன போரட்டம்!

தென்னை விவசாயிகளுக்கு, உரி தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய்களுக்குரிய நியாயமான விலை கிடைத்திட மத்திய மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க கோரி, தேங்காய்களை சாலையில் உடைத்து கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உரி தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய் களுக்குரிய நியாயமான விலை

author img

By

Published : Jul 8, 2022, 9:00 PM IST

சமீப காலமாக தென்னை விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்காமல் அவதியுற்று வருகின்றனர். இந்த அவல நிலையை போக்க, மத்திய, மாநில அரசுகள் கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றுக்கு ரூபாய் 150 மற்றும் உரி தேங்காய் கிலோ ஒன்றுக்கு ரூபாய் 50 கிடைக்க வேண்டும்.

மேலும் கேரளா மாநிலத்தை போல வட்டார அளவில் கொப்பரை கொள்முதல் நிலையங்களை திறந்திடவும், பொது விநியோக அங்காடி மற்றும் சத்துணவு கூடங்களில் இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய்க்குப் பதிலாக தேங்காய் எண்ணெய் பயன்படுத்திட வலியுறுத்தி கும்பகோணம் தலைமை அஞ்சலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த தஞ்சை மாவட்ட பொறுப்பு செயலாளர் சாமு தர்மராஜன் தலைமையில் திரள ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதனை ஏஐடியுசி தஞ்சை மாவட்ட செயலாளர் ஆர் தில்லைவனம் முன்னிலையில், சிபிஐ தஞ்சை மாவட்ட செயலாளர் மு.அ பாரதி தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான தென்னை விவசாயிகள் செங்கொடிகளுடன், தேங்காய்களை ஏந்தி கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், கையில் வைத்திருந்த தேங்காய்களை சாலையில் போட்டு உடைத்து நூதன முறையில் அரசிற்கு கோரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க: அன்லிமிடெட் மீல்ஸ் வேண்டும் - மாணவர்கள் போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.