ETV Bharat / state

போலி ஆவண வழக்கு: 18 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு

தஞ்சாவூர்: போலி ஆவணங்கள் கொடுத்து ஆசிரியர் பணியில் சேர்ந்ததாக தொடரப்பட்ட வழங்கில், 18 ஆண்டுகளுக்கு பின் திருவையாறு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

போலி ஆவண வழக்கு: 18 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு
போலி ஆவண வழக்கு: 18 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு
author img

By

Published : Oct 30, 2020, 8:01 AM IST

போலி ஆவணங்கள் கொடுத்து ஆசிரியர் பணியில் சேர்ந்த விவகாரம் தொடர்பாக. தஞ்சை மாவட்ட கல்வி அலுவலர் சுபத்ரா, திருநீலக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், அவனியாபுரம் கிரசெண்ட் மேல்நிலைப்பள்ளியில் போலி ஆவணங்களை கொடுத்து, இடைநிலை ஆசிரியர்களாக அன்சாரி, ஆமீனா (என்கிற) ராஜாத்தி இதற்கு போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்த ஸ்டீபன், கண்ணையன் ஆகிய நான்கு பேர் மீது கடந்த 2002 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி கொடுத்த புகாரின் பெயரில், திருநீலக்குடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்துவந்த நிலையில் சென்னை சிபிசிஐடி இயக்குநர் உத்தரவின்படி, இந்த வழக்கு தஞ்சை சிபிசிஐடி அலுவலகத்திற்கு மாற்றப்பட்டு மேல்விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில், இவ்வழக்கு திருவையாறு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இவ்வழக்கில் நேற்று முன் தினம்(அக்.28) தீர்ப்பளித்த நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட ஆமீனா (என்கிற) ராஜாத்தியும், கண்ணையனும் இறந்துவிட்டார்கள். மீதம் உள்ள அன்சாரி, ஸ்டீபன் ஆகியோருக்கு மூன்று ஆண்டுகள் கடும்காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அதை கட்டத்தவறினால் மேலும் மூன்று மாதம் சிறை தண்டனையும் வழங்கி நீதிபதி மணிகண்டன் தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கை சிறப்பாக புலன் விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்த சிபிசிஐடி காவல் அலுவலர்களுக்கு, சென்னை சிபிசிஐடி தலைமையக காவல்துறை தலைவர் சங்கர், காவல்துறை கண்காணிப்பாளர் ரவி ஆகியோர் பாராட்டினர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.