ETV Bharat / state

இறப்பிலும் இணை பிரியாத வயது முதிர்ந்த தம்பதி! - தஞ்சாவூரி வயதான தம்பதி ஒரே நாளில் இறப்பு

தஞ்சாவூர்: சேதுபாவாசத்திரம் அருகே இறப்பிலும் இணை பிரியாத வயது முதிர்ந்த தம்பதி ஒரே நாளில் இறந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இறப்பிலும் இணைபிரியாத தம்பதி
இறப்பிலும் இணைபிரியாத தம்பதி
author img

By

Published : May 25, 2020, 11:41 AM IST

Updated : May 25, 2020, 12:24 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள விளங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆன்மிக சொற்பொழிவாளர் ரெத்தினம்(95). இவருடைய மனைவி மங்களம்(90). இவர்களுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர்.

மகன் முருகானந்தம் (54) உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் வழக்கறிஞராக உள்ளார். ரெத்தினம், தனது மனைவி, மகனின் குடும்பத்தினருடன் மதுரையில் வசித்து வந்தார். வயது முதிர்ச்சி காரணமாக ரெத்தினம் நேற்று காலை இறந்தார்.

இதையடுத்து அவருடைய உடலை சொந்த ஊரில் தகனம் செய்ய முருகானந்தம் விரும்பினார். அதன்படி அவசர ஊர்தி மூலம் அவருடைய உடல் விளங்குளத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அவசர ஊறதியில் ரெத்தினத்தின் மனைவி மங்களம், மகன் முருகானந்தம், அவருடைய குடும்பத்தினரும் வந்தனர். விளங்குளத்தில் உள்ள வீட்டில் ரெத்தினத்தின் உடல் இறக்கி வைக்கப்பட்டது.

இறப்பிலும் இணைபிரியாத தம்பதி

அப்போது பல ஆண்டு காலம் அன்புடன் வாழ்ந்த கணவர் இறந்து விட்டதை நினைத்து மங்களம் கதறி அழுதபடி கணவரின் உடல் அருகிலேயே இருந்தார். உடல் வீட்டுக்கு எடுத்து வரப்பட்ட அரை மணிநேரத்தில் மங்களத்தின் உயிரும் பிரிந்தது. கணவருடைய உடல் அருகிலேயே மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் எழுப்பியபோது அவர் இறந்தது தெரியவந்தது.

வாழ்வில் மட்டுமின்றி சாவிலும் கைகோர்த்த தம்பதியை நினைத்து உறவினர்கள் கதறி அழுதனர். இறப்பிலும் இணை பிரியாத இருவரின் உடல்களுக்கும் ஒரே நேரத்தில் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு, ஒரே தகன மேடையில் வைத்து உடல்கள் தகனம் செய்யப்பட்டன.

இதையும் படிங்க: ஆம்புலன்ஸ் வராததால் காத்திருந்த முதியவர் உயிரிழப்பு

Last Updated : May 25, 2020, 12:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.