தஞ்சாவூர்: சின்னயாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் போஸ் (வயது 40) பெயிண்டரான இவர் நேற்று (ஜூலை 7) இரவு மது அருந்திவிட்டு எம்.கே.மூப்பனார் சாலையில் நடந்து வந்துள்ளார். அளவுக்கதிகமாக மது குடித்ததால் போதை தலைக்கேறி எங்கு செல்கிறோம் என தெரியாமல் தட்டுத்தடுமாறி நடந்து வந்துள்ளார்.
கலைஞர் அறிவாலயம் முன்பு சென்றபோது திடீரென நடுரோட்டில் அமர்ந்து சத்தம் போட்டு உளற ஆரம்பித்தார். நான் தி.மு.க தொண்டன், என் வீட்டை வந்து பார்த்து சீரமைக்க வேண்டும் எனப் பேசி உள்ளார்.
சிறிது நேரத்தில் நடுரோட்டில் படுத்து கொண்டு கோஷம் எழுப்பினார். இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். சிலர் போஸின் செயலை வேடிக்கை பார்த்து சிரித்தபடியே சென்றனர். அங்கிருந்த பொதுமக்கள் சிலர் போஸை வலுக்கட்டாயமாகத் தூக்கி சாலையோரம் அப்புறப்படுத்தினர். அதன் பின்னரே அங்கு போக்குவரத்து சீரானது.
இதையும் படிங்க: ஏடிஎம்மில் நூதன முறையில் கொள்ளையடிக்க கற்றுத் தந்தது யார்? - காவல் துறையினர் விசாரணை