தஞ்சாவூர் மாவட்டம் தென்றல் நகர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் வீட்டில் டாபர்மேன் நாயை வளர்த்து வருகிறார். இதன் பெயர் அபி என்ற அபிராமி.
கிருஷ்ணமூர்த்திக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். அவர்கள் திருமணமாகி சிங்கப்பூர், சென்னையில் வசித்து வருகிறார்கள்.
இதனால் அபிராமி நாயை மேலும் ஒரு பெண் பிள்ளையாக கிருஷ்ணமூர்த்தி வீட்டில் வளர்த்து வருகிறார். இந்த நாய்க்கு இன்று (நவ. 11) வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கிருஷ்ணமூர்த்தியின் உறவினர்கள் நாய்க்கு சீர்வரிசை தட்டுகளை ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் நாய்க்கு மஞ்சள் குங்குமம் திலகமிட்டு, வளையல் அணிந்து ஆராத்தி எடுக்கப்பட்டது. இதற்காக கிருஷ்ணமூர்த்தி அப்பகுதி மக்களுக்கு வளைகாப்பு அழைப்பிதழ் கொடுத்து நிகழ்ச்சியை நடத்தினார்.
இதையும் படிங்க: பூனைக்கு வளைகாப்பு நடத்திய உரிமையாளர்... காணொலி வைரல்...!