ETV Bharat / state

"என்னிடம் வெறும் 500 ரூபாய் தான் இருக்கிறது"- மருத்துவர் ராமதாஸின் முழு உரை! - தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கும்பகோணத்தில் நடைபெற்ற தமிழை தேடி விழிப்புணர்வு நிகழ்வில், தமிழ் அன்னை எங்கு இருக்கிறாள் என அடையாளம் காட்டுவோருக்கு ரூ.5 கோடி பரிசு தருவதாக அறிவித்திருந்தேன் ஆனால், "என் தலையை அடகு வைத்தாவது ரூ.5 கோடி தருகிறேன்" என்று மருத்துவர் இராமதாஸ் கூறியுள்ளார்.

"என் தலையை அடகு வைத்தாவது ரூ.5 கோடி தருகிறேன்"- மருத்துவர் இராமதாஸ்

author img

By

Published : Feb 26, 2023, 7:12 AM IST

"என் தலையை அடகு வைத்தாவது ரூ.5 கோடி தருகிறேன்"- மருத்துவர் இராமதாஸ்

தஞ்சாவூர்: தமிழ்நாட்டில் தமிழின் பயன்பாடு மெல்ல மெல்ல குறைந்து கொண்டே வருகிறது. இதனை மீட்கவும், அனைவரும் தமிழிலேயே பேசவும் நம் குழந்தைகளுக்கு தமிழிலேயே பெயர் சூட்டி மகிழவும், பொங்கு தமிழ் அறக்கட்டளை நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், 'தமிழைத்தேடி' எனும் தலைப்பில், சர்வதேச தாய்மொழி தினமான பிப்ரவரி 21ஆம் தேதி சென்னையில் விழிப்புணர்வு பரப்புரை பயணத்தை தொடங்கி, தொடர்ந்து 8 நாட்கள் பயணம் செய்து 28ஆம் தேதி சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் நிறைவு செய்ய உள்ளார்.

இதன் ஒருபகுதியாக பயணத்தின் 5-வது நாளான நேற்றிரவு கும்பகோணத்தில், பொங்கு தமிழ் அறக்கட்டளை தலைவர் கோ.க. மணி தலைமையில் நடைபெற்ற தமிழைத்தேடி எனும் விழிப்புணர்வு பரப்புரை பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு மருத்தவர் ராமதாஸ் சிறப்புரையாற்றினார்.

அப்போது, 'தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர், புறநானூறு, அகநானூறு, சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, மணிமேகலை, திருமுருகாற்றுப்படை, பத்துப்பாட்டு, மதுரை காஞ்சி, உள்ளிட்ட 90க்கும் மேற்பட்ட ஏட்டளவில் இருந்த நூல்களை அச்சாக்கம் செய்து, அவர் வாழ்ந்த 87 ஆண்டுகளில், தமிழுக்காக, தமிழை வளர்க்க, ஏறத்தாழ 68 ஆண்டுகள் தன்னலமற்ற தொண்டாற்றி பெருமை சேர்த்தவர்.

அத்தகைய பெருமைமிக்க தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யரின் ஊர், கும்பகோணம் அருகேயுள்ள உத்தமதானபுரம். இன்று தமிழ்நாட்டில் தமிழ் எங்குள்ளது என தேடும் நிலை ஏற்பட்டுள்ளது. 10 வார்த்தைப் பேசினால் அதில் ஒரு வார்த்தை தான் தமிழில் உள்ளது. அதுவும் கொச்சைத் தமிழாக உள்ளது. இனியாவது நாம் வீடுகளில் தமிழில் பேச வேண்டும். நம் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டி மகிழ வேண்டும். இதன் மூலம் அன்னைத் தமிழை மீட்டெடுக்க முடியும்.

பிரெஞ்ச் புரட்சிக்கு வித்திட்டது, மெர்சி என்ற பிரெஞ்ச் வார்த்தைக்குப் பதிலாக தேங்க்யூ என்ற ஒற்றை ஆங்கில வார்த்தை பயன்பாடு தான். அந்த புரட்சிக்கு பிறகு தேங்க்யூ என்ற வார்த்தை மீண்டும் இங்கிலாந்திற்கே சென்றது. ஆனால், தமிழ்நாட்டில் தமிழ் தான் இல்லை. இன்று தமிழ்நாட்டில் நாம் அன்னைத் தமிழை தொலைத்து விட்டு, தமிழ் இல்லாமல் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

மேலும், தமிழ் அன்னை எங்கு இருக்கிறாள் என அடையாளம் காட்டுவோருக்கு ரூ.5 கோடி பரிசு தருவதாக சென்னையில் அறிவித்திருந்தேன். ஆனால், என்னிடம் ஏது ரூ.5 கோடி. என்னிடம் வெறும் ரூ.500 தான் உள்ளது. என் தலையை அடகு வைத்தாவது ரூ.5 கோடி தருகிறேன் என்று சொல்லியிருந்தேன்.

மேலும், அன்னைத் தமிழை யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்ற எண்ணத்திலும் தான் அப்படி சொல்லியிருந்தேன். தமிழ்நாட்டில் பெயர் பலகையில் பெரும்பான்மை பகுதி தமிழில் இருக்க வேண்டும் என ஒரு திங்கள் அவகாசம் அளித்து, மாற்றாத பெயர்ப் பலகைகளை கருப்பு மை பூசி அழிக்கும் போராட்டத்தை தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்கள் கூடி பேசி முன்னெடுக்க வேண்டும்' என்றும் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்தார்.

இதையும் படிங்க:மீண்டும் எதிரொலிக்கும் காலிஸ்தான் தனி நாடு கோரிக்கை: பஞ்சாப் அரசியலில் ஏற்படும் தாக்கம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.