ETV Bharat / state

நடராஜர் சிலையை இடம் மாற்ற வேண்டாம்: பொதுமக்கள் கோரிக்கை - Don't change statue request

தஞ்சாவூர்: ஊருக்குள் கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் நடராஜர் சிலையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டாமென பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

ஐம்பொன் நடராஜர் சிலையை வேறு இடத்திற்கு மாற்ற எதிர்ப்பு

author img

By

Published : Mar 7, 2020, 10:20 AM IST

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள வள்ளிகொல்லைக்காடு கிராமத்தில் சில மாதங்களுக்கு முன் ஆறடி உயர பழங்கால ஐம்பொன் நடராஜர் சிலை கண்டெடுக்கப்பட்டது. சிலைத் தடுப்புப் பிரிவு சிறப்பு அலுவலர் பொன் மாணிக்கவேல் தலைமையில், இந்தச் சிலை அதிராம்பட்டினம் அபய வரதீஸ்வரர் கோயில் பெட்டக அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

இதனைச் சிலைத் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் பாதுகாத்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் வருவாய்த் துறை அலுவலர்கள், அறநிலையத் துறை அலுவலர்கள், காவல் துறையினர் சிலையை வேறு இடத்திற்கு கொண்டுசெல்வதற்காக, சிலையை எடுப்பதற்கு முயன்றனர். தகவல் அறிந்ததும் இந்து முன்னணி தஞ்சை மாவட்ட பொதுச்செயலாளர் விஜயகுமார் தலைமையில் இந்து முன்னணியினர், பக்தர்கள் அலுவலர்களை முற்றுகையிட்டு சிலையைக் கொண்டுபோகவிடாமல் தடுத்துநிறுத்தினர்.

ஐம்பொன் நடராஜர் சிலையை வேறு இடத்திற்கு மாற்ற எதிர்ப்பு

இதைத் தொடர்ந்து, அலுவலர்கள் சிலையை எடுக்காமல் திரும்பிச் சென்றுவிட்டனர். அதிராம்பட்டினம் பகுதி பொதுமக்கள் தொடர்ந்து அந்தச் சிலையை வணங்கிவருவதால் கோயிலிலேயே சிலையை வைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கைவைத்துள்ளனர். இது தொடர்பாக, இந்து முன்னணியினர் மாவட்ட ஆட்சியர் இடத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

இதையும் படிங்க: திமுக மூத்த தலைவரும், பொதுச்செயலாளருமான அன்பழகன் காலமானார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.