ETV Bharat / state

கார்ப்பரேட் ஆட்சியாக மாறுகிறதா திமுக? - விவசாயிகள் அச்சம்

author img

By

Published : Dec 26, 2022, 10:43 PM IST

தமிழ்நாட்டில் நிறைவேற்றப்படும் திட்டங்களைப் பார்த்தால், கார்ப்பரேட் ஆட்சியாக திமுக மாறிவிட்டதா என்ற அச்சம் விவசாயிகள் இடையில் ஏற்படுகிறது என பி.ஆர். பாண்டியன் கூறியுள்ளார்.

கார்ப்பரேட் ஆட்சியாக மாறுகிறதா திமுக.. விவசாயிகள் அச்சம்
கார்ப்பரேட் ஆட்சியாக மாறுகிறதா திமுக.. விவசாயிகள் அச்சம்
கார்ப்பரேட் ஆட்சியாக மாறுகிறதா திமுக? - விவசாயிகள் அச்சம்

தஞ்சாவூர்: அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாநிலத் தலைவர் பிஆர் பாண்டியன் தஞ்சையில் இன்று (டிசம்பர் 26) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பொது வினியோகத் திட்டத்தில் ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி விற்பனை செய்யப்படும் என உணவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.

இந்த அறிவிப்பின் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களை களம் இறக்குவது மட்டுமல்லாமல் மத்திய அரசு அறிவித்துள்ள சிறுதானிய ஆண்டின் கொள்கை முடிவுகளை சிதைக்கிற வகையில் தமிழக அரசு இத்திட்டத்தை அறிவித்துள்ளது. எனவே, இதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

தமிழ்நாட்டில் நிறைவேற்றப்படும் திட்டங்களைப் பார்த்தால், கார்ப்பரேட் ஆட்சியாக திமுக மாறிவிட்டதா என்ற அச்சம் விவசாயிகள் இடையில் ஏற்படுகிறது. பொங்கல் தொகுப்பு திட்டத்தில் கரும்பை வழங்க வேண்டும்.

திருமண்டங்குடி சர்க்கரை ஆலையை தமிழக அரசின் ஆதரவு பெற்ற ஒரு சில குடும்பங்கள் விலைக்கு வாங்கி இருக்கிறார்கள் என விவசாயிகள் அஞ்சுகிறார்கள். அது உண்மையா? பொய்யா? என்பதை தமிழக முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆதி திராவிடர் விடுதிக்கு செலவிடாதது ஏன்? - அண்ணாமலை கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.