தஞ்சாவூரில் அதிமுக கூட்டணி கட்சி சட்டப்பேரவை, நாடாளுமன்ற வேட்பாளர்கள் ஆர்.காந்தி, என்.ஆர் நடராஐன் ஆகியோரை ஆதரித்து தேமுதிக பொருளாளர் பிரேமலாதா விஜயகாந்த் தஞ்சை கீழவாசல் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பிரச்சாரம் நிறைவடையும் போது அங்கிருந்த தொண்டர்கள் திமுக பொருளாளர் துரைமுருகனை பற்றி பேசுமாறு கூச்சலிட்டனர்.
இதையடுத்து பேசிய பிரேமலதா, நம்மை கேவலபடுத்த நினைத்தார். தற்போது தன்னைத் தானே அவர் கேவலப்படுத்தி கொண்டார். இதைப் பார்க்கையில் கேப்டன் கூறியதுதான் நினைவில் வருகிறது. அரசன் அன்று கொள்வான். தெய்வம் நின்று கொள்ளும் என பேசினார்.