ETV Bharat / state

வீர தீர செயல் புரிந்த பெண் குழந்தைகளுக்கான மாநில விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

தஞ்சாவூர் : வீர தீர செயல் புரிந்து வரும் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளை சிறப்பிக்கும் மாநில விருதுக்கான விண்ணப்பங்களுக்கான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்த ராவ் வெளியிட்டுள்ளார்.

வீர தீர செயல் புரிந்த பெண் குழந்தைகளுக்கான மாநில விருது பெற மாவட்ட ஆட்சியர் அழைப்பு

author img

By

Published : Sep 4, 2020, 7:10 PM IST

தமிழ்நாடு அரசு, சமூக நலம் சத்துணவு திட்டத் துறை மூலம், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்பதை உறுதி செய்யவும், பெண் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களைத் தடுக்கவும் பாடுபட்டு வீரதீர செயல் புரிந்து வரும் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளை சிறப்பிக்கும் விதமாக மாநில விருது ஒன்றை அறிவித்து அரசாணை பிறப்பித்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இதனை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

இதன்படி வருடந்தோறும் மேற்குறிப்பிட்டவாறு சேவை புரிந்து வரும் சிறந்த குழந்தை ஒருவருக்கு தேசியப் பெண் குழந்தைகள் தினத்தில் பாராட்டுப் பத்திரமும், ஒரு லட்சத்திற்கான காசோலையும் வழங்கி சிறப்பிக்கப்படுகிறது. அந்த வகையில், வருகிற ஜனவரி 2021இல் தேசியப் பெண் குழந்தை தினத்தில் மாநில விருது வழங்கிட 18 வயதிற்குட்பட்ட தகுதியான பெண் குழந்தைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரும் அக்டோபர் 31ஆம் தேதி வரை வரவேற்கப்படுகின்றன.

விருதிற்கான விண்ணப்பங்கள் தலைமையாசிரியர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அலுவலர்கள் வாயிலாக உரிய முன் மொழிவுகளுடன் மாவட்ட சமூக நல அலுவலரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

மாவட்ட ஆட்சியர் பரிந்துரையுடன் சமூக நல ஆணையரகத்திற்கு பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு பெறப்படும் விண்ணப்பங்கள், மாநில அளவில் தேர்வுக் குழு மூலம் பரிசீலனை செய்யப்பட்டு, பின்னர் விருதிற்கான அனைத்து தகுதிகளையும் பெற்ற ஒரு பெண் குழந்தை தேர்வு செய்யப்பட்டு 24.01.2021 அன்று இந்த மாநில விருது வழங்கப்படும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.