ETV Bharat / state

தண்ணீர் இல்லை; கருகும் நிலையில்  கோடை சாகுபடி  பயிர்கள் - பட்டுக்கோட்டை

தஞ்சாவூர்: நிலத்தடி நீர் அதள பாதளத்துக்கு சென்றதால் கோடை சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.

தண்ணீர் இல்லை; கருகும் நிலையில்  கோடை சாகுபடி  பயிர்கள்
author img

By

Published : May 17, 2019, 10:55 AM IST

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதிக்கு உட்பட்ட விவசாய நிலங்களில் சம்பா சாகுபடி நிறைவடைந்த நிலையில் குறுவை சாகுபடிக்கு விவசாயிகள் தயார் அடைந்துவருகின்றனர். சமீபகாலமாக கடும் வெயில் வாட்டி வதைப்பதால் சுற்றுவட்டார பகுதியில் இருக்கும் அத்தனை ஏரிகளிலும் தண்ணீர் வறண்டு போய்விட்டன. இதனால் குறுவை சாகுபடி செய்ய முடியாது என பெரும்பாலான விவசாயிகள் கைவிட்டனர்.

தண்ணீர் இல்லை; கருகும் நிலையில் கோடை சாகுபடி பயிர்கள்

இதையடுத்து, ஆழ்குழாய் கிணறு வைத்திருக்கும் சிலர், கோடை சாகுபடி செய்து விடலாம் என்ற நம்பிக்கையில் சில விவசாயிகள் ஆரம்பகட்ட பணிகளை தொடங்கினர்.

இந்நிலையில், அப்பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் நிலத்தடி நீர் கடுமையாக குறைந்துவிட்டது. இதனால் பெரும்பாலான ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் இல்லாததால் கோடை சாகுபடி பயிர்கள் கருகும் நிலையில் உள்ளது.

Intro:நிலத்தடி நீர் குறைவால் ஆழ்குழாய்க் கிணறுகள் இயங்கவில்லை கோடை சாகுபடிக்கு வந்தது சிக்கல்

Body:தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதிக்கு உட்பட்ட விவசாய நிலங்களில் சம்பா சாகுபடி நிறைவடைந்த நிலையில் குறுவை சாகுபடிக்கு விவசாயிகள் தயார் அடைந்தனர். ஏரி குளங்களில் நிரப்பி வைக்கப்பட்ட தண்ணீர் தற்போது மழை இல்லாமல் கடுமையான வெயில் அடித்து வருவதால் அத்தனை ஏரிகளிலும் உள்ள தண்ணீர் வறண்டு போய்விட்டன. இதனால் குறுவை சாகுபடி செய்ய முடியாது என்று அந்த முயற்சியை 75 சதவீத விவசாயிகள் கைவிட்டனர். இந்நிலையில் ஆழ்குழாய்க் கிணறுகள் மூலம் விவசாயம் செய்யும் மீதமுள்ள 25 சதவீத நெல் விவசாயிகள் ஆழ்குழாய் கிணறுகள் மூலம் கோடை சாகுபடி செய்து விடலாம் என்ற முயற்சியில் ஆரம்பகட்ட விவசாய பணிகளை செய்து வந்தனர். இந்நிலையில் பட்டுக்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக கடுமையான வெயில் அடித்து வருவதால் நிலத்தடி நீர் கடுமையாக குறைந்துவிட்டன. இதனால் பெரும்பாலான ஆழ்குழாய் கிணறுகள் இயங்காமல் போய்விட்டன. இதனால் கோடை சாகுபடி நடைபெற்று வரும் நிலையில் ஆழ்குழாய் கிணறுகளிலும் தண்ணீர் வராததால் கோடை சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. உதாரணமாக இந்த பகுதிகளில் 200 அல்லது 250 அடியில் நிலத்தடி நீர் இருந்துவரும் நிலையில் தற்போது 600- 800 அடிக்கு சென்று விட்டது. இதனால் பெரும்பாலான ஆழ்குழாய் கிணறுகள் இயங்கவில்லை. இப்படியிருக்கையில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களை காப்பாற்றுவது சந்தேகம்தான் என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.