ETV Bharat / state

தஞ்சையில் ஜெய் பீம் 2.0 நிகழ்ச்சியில் அண்ணாமலையை வெளுத்து வாங்கிய முத்தரசன்! - jai bhim 2 O

கும்பகோணத்தில் நடைபெற்ற ஜெய் பீம் 2.0 நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரை குறித்து விமர்சித்தார்.

தஞ்சையில் ஜெய் பீம் 2.0 நிகழ்ச்சி சிறப்புரையாற்றிய தமிழரசன்

author img

By

Published : Aug 7, 2023, 11:00 PM IST

தஞ்சையில் ஜெய் பீம் 2.0 நிகழ்ச்சி சிறப்புரையாற்றிய தமிழரசன்

தஞ்சாவூர்: ஜெய் பீம் 2.0 என்ற நிகழ்ச்சி கும்பகோணத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், "பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, பாதயாத்திரை செல்வது குறித்து கிண்டலாக, அவர் தன்னை முன்னிலைப்படுத்தி, விளம்பரம் தேடிக் கொள்ளவே இதனை பயன்படுத்தி வருகிறார்" என்றார்.

அதனைத் தொடர்ந்து, "எத்தனையோ தலைவர்கள் பாதயாத்திரை சென்று இருக்கிறார்கள். ஏன் நாங்களும் பாதயாத்திரை சென்று இருக்கிறோம். நடந்தே செல்வதற்கு பெயர் தான் பாதயாத்திரை. இவர் செல்வது போல, குளிர்சாதனம் பொருத்தப்பட்ட வேனில் செல்வதற்கு பெயர் பாதயாத்திரையா என கேள்வி எழுப்பியதுடன், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், ஒரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கம் எதுவும் அவருக்கு இல்லை.

இதையும் படிங்க: இல்லம் தேடி கல்வி தன்னார்வலரை அவமதித்த ஆங்கில ஆசிரியர் - உறவினர்கள் முற்றுகைப் போராட்டம்

மாறாக, தன்னை முன்னிலைப்படுத்தி விளம்பரம் தேடிக் கொள்ள வேண்டும். அது தான் அவருடைய ஒரே நோக்கம். அதற்காக அவர் என்னென்னமோ செய்து பார்க்கிறார். ஆனால் அது ஒரு போதும் தமிழகத்தில் எடுபடாது. தமிழகத்தில் உள்ள ரவுடிகள் அனைவரும் அவருடன் அவர் கூடவே தான் இருக்கிறார்கள். அந்த ரவுடிகள் தான் இந்த சொகுசு குளிர்சாதன பாதயாத்திரையை வழி நடத்துவதாகவும்" கிண்டல் அடித்து குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், "இந்த பாதயாத்திரை மூலம் தமிழ்நாட்டில் அவர்கள் பெரிய கட்சியாக அவர்களை அவர்களே உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்திலே செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக மாநிலத் தலைவர் அண்ணாமலை அந்த யாத்திரை மூலம் தன்னை பெரிதளவில் பாவிக்கும் எண்ணத்தில் செயல்பட்டு வருகின்றார். என்னதான் இவர்கள் செய்தாலும் நம்முடைய கொள்கைக்கு நிகராக இவர்கள் ஒரு போதும் வருவதற்கு வாய்ப்பு இல்லை" என காட்டமாகத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இந்திய மொழிகள் அனைத்துமே எனது தாய் மொழிகள் தான் - குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.