தஞ்சாவூர் மாவட்டம் மல்லிபட்டினம் அருகே செம்பருத்தி நகரில் உள்ள குடிசை வீட்டில் நேற்று (ஜூன் 4) திடீரென தீப்பிடித்தது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், அருகில் உள்ள குடிசை வீடுகளுக்கும் தீ பரவியது.
இதைக் கண்ட அப்பகுதியினர், தீ மேலும் பரவாமல் இருக்க தண்ணீரை ஊற்றி அணைக்க முற்பட்டும் தீயை அணைக்க முடியவில்லை. இது குறித்து பேராவூரணி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடம் விரைந்த தீயணைப்புத் துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீயணைப்புத் துறையினர் வருவதற்குள் 5 குடிசை வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமாயின. தீப்பிடித்து எரிந்த வீடுகளில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த சேதுபாவாசத்திரம் காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வலசை: கோமல் கிராமத்தில் தஞ்சமடையும் பறவைகள்!