தஞ்சாவூர் மாவட்டத்தை பொறுத்தவரை நாளுக்கு நாள் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நேற்று( செப்டம்பர் 23) ஒரே நாளில் 186 பேருக்கு கரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 5 லட்சத்து 57 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பிவரும் நிலையில், மாவட்டத்தில் இதுவரை 9 ஆயிரத்து 836 பேர் கரோனா தொற்றால் சிகிச்சை பெற்றனர்.
கரோனா தொற்று பாதிப்படைந்தவர்கள் தஞ்சாவூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
ஒரே நாளில் நோய் தொற்றிலிருந்து 138 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போதுவரை மருத்துவமனையில் 1, 217 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிகிச்சை பலனின்றி நேற்று (செப்டம்பர் 23) 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 156ஆக அதிகரித்துள்ளது.
தஞ்சாவூரில் ஒரேநாளில் 186 பேருக்கு கரோனா - கரோனா நோய்தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை
தஞ்சாவூர்: ஒரே நாளில் 186 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதுடன் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.