தஞ்சாவூர் மாவட்டத்தை பொறுத்தவரை நாளுக்கு நாள் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இன்று (ஆகஸ்ட் 6) ஒரே நாளில் 162 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 2 லட்சத்து 79 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 3 ஆயிரத்து 484 நபர்கள் கரோனா தொற்று பாதிப்படைந்து சிகிச்சைப் பெற்றனர். நோய்த் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் தஞ்சை மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
தற்போது வரை 881 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சிகிச்சைப் பலனின்றி 36 பேர் உயிரிழந்தனர். இன்று (ஆகஸ்ட் 6) ஒரே நாளில் 91 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.