கரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இத்தொற்று பரவாமல் இருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிதாக 123 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 215ஆக உயர்ந்துள்ளது.
மேலும் மாவட்டத்தில் ஆயிரத்து 277 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில், சிகிச்சை பலனின்றி 49 பேர் உயிரிழந்துள்ளனர்.