தஞ்சை மாவட்டம் சுவாமிமலையில் முருகனின் அறுபடைவீடுகளில் ஒன்றான சுவாமிமலையில் உள்ள சுவாமிநாதன் சுவாமி திருக்கோயிலில் கார்த்திகை திருவிழா டிசம்பர் மாதம் 2ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பின்னர் நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுப்ரமணிய சுவாமியின் திருவீதி உலாவும் நடைபெற்றது. இன்று கார்த்திகைத் திருநாளை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலையிலிருந்தே சுவாமி தரிசனம் செய்துவருகின்றனர்.
மேலும் முக்கிய நிகழ்ச்சியான சுப்ரமணிய சுவாமி பரிவாரங்களுடன் மலைக்கோயிலிலிருந்து திருத்தேரில் எழுந்தருளினார். இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் அரோகரா முழக்கத்துடன் தேரினை வடம்பிடித்து இழுத்துவந்தனர். நாளை (டிசம்பர் 11) காவிரிக் கரையில் தீர்த்தவாரியுடன் திருக்கார்த்திகை திருவிழா நிறைவடைகிறது.
இதையும் படிங்க:
கார்த்திகையை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலில் பரணி தீபம் ஏற்றம்!