ETV Bharat / state

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர் சேதங்களை மத்திய குழுவினர் ஆய்வு! - tanjore news

தொடர் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர் சேதங்களை மத்திய குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அழுகிய பயிர்களைக் காண்பித்து, அலுவலர்களுக்கு விவசாயிகள் விளக்கமளித்தனர்.

Central team inspects rain affected crops

author img

By

Published : Feb 4, 2021, 6:25 PM IST

தஞ்சாவூர்: மழையால் பாதிக்கப்பட்ட விவசாய பயிர்களை மத்திய குழுவினர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டத்தில் 2020 டிசம்பர், 2021ஜனவரி ஆகிய மாதம் பெய்த கன மழையில் சுமார் 5 லட்சம் ஏக்கர் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால், விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

மழையால் சேதமான மக்காச்சோள பயிர்களுக்கு இழப்பீடு கோரி மனு

பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்த நிலையில், சேதமடைந்த பயிர்களைப் பார்வையிட மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மண்டல அலுவலர் ரணஞ்சய் சிங், மத்திய மின்சார குழுமத்தின் உதவி இயக்குநர் சுபம் கார்க், மத்திய மீன்வள மேம்பாட்டு ஆணையர் பால் பாண்டியன் ஆகியோர் அடங்கிய குழுவினர் தஞ்சை மாவட்டத்தில் காவாளிபட்டி, நம்பிவயல், திப்பியகுடி, ஒக்கநாடுகீழையூர், துறையூர் ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட நெல், கடலை உள்ளிட்ட பயிர்களை ஆய்வு செய்தனர்.

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர் சேதங்களை மத்திய குழுவினர் ஆய்வு

தொடர்ந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம், பாதிப்புகள் குறித்துக் கேட்டறிந்தனர். ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ், வேளாண் துறை இணை இயக்குநர் ஜஸ்டின் ஆகியோர் உடனிருந்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.