தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த ஆனந்த்,இவர் கட்டிட பொறியாளர்,இவரது மகன் ஆசிய்வ் வயது ஒன்பது, ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு தனது இரண்டு கண்களையும் கட்டிக்கொண்டு பட்டுக்கோட்டை நகரின் முக்கிய வீதி வழியாக சைக்கிள் ஓட்டி சாதனை படைத்தான்.
மேலும் வரும் காலங்களில் 20 கிலோ மீட்டர் தூரம் வரை கண்களை கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டி உலக சாதனை படைப்பேன் என்றும், அதற்கான முதல் முயற்சியாக தற்போது மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை சைக்கிள் ஓட்டி உள்ளேன் என்றும் கூறினார்.