தஞ்சாவூர் மாவட்டத்தின் மையப் பகுதியில் 39 ஏக்கர் பரப்பளவில், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மருத்துவமனையான ராசா மிராசுதார் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்து செயல்பட்டு வரும் இந்த மருத்துவமனை வளாகத்தில், மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்ட பின், மகப்பேறு, சித்த மருத்துவம், கண் சிகிச்சை, காசநோய் ஆகிய பிரிவுகள் மட்டும் செயல்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் அதிக அளவு பிரசவம் நடைபெறும் மருத்துவமனைகளில் இந்த மருத்துவமனையும் ஒன்றாகும். ஆண்டுக்கு 1.25 லட்சம் குழந்தைகள் இம்மருத்துவமனையில் பிறக்கின்றனர். தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இம்மருத்துவமனையை அதிகம் அணுகி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த மார்ச் 25ஆம் தேதி தொடங்கி நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், மாவட்டத்திலுள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை அடுத்து, ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது
இந்நிலையில், இந்த ஊரடங்கு காலத்தில் மட்டும், ராசா மிராசுதார் மருத்துவமனையில், 1,300க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கொள்முதல் நிலையங்கள் இல்லாததால் தேங்கிக்கிடக்கும் நெல்கள்