தஞ்சாவூர்: கும்பகோணம் தாராசுரம் அண்ணா சிலை அருகே மாடி வீட்டில் விஜய் ஆனந்த்-கீர்த்திகா தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களது ஒன்றரை வயது ஆண் குழந்தை ஹரி பிரியன் இன்று (ஜுன் 3) வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கிருந்த இரும்பாலான தடுப்பு கம்பிகளுக்கு இடையே குழந்தையின் தலை மாட்டிக்கொண்டது.
இதையடுத்து குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு வந்த பெற்றோர் குழந்தையை மீட்க போராடினர். மாடி வீடு என்பதால் அவ்வழியாக சாலையில் சென்றோர் பலரும் இதைக்கண்டு திடுக்கிட்டனர். சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதலங்களில் பதிவிட்டனர்.
இதனிடையே அக்கம் பக்கத்தினர் இரண்டு பக்க கம்பிகளையும் நெழித்து அகலப்படுத்தியதன் மூலம் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: வீடியோ: விழுப்புரத்தில் குடத்தில் சிக்கிய சிறுவன்