ETV Bharat / state

கும்பகோணத்தில் மேயரான ஆட்டோ ஓட்டுநர்! - கும்பகோணத்தில் மேயர் பதவியேற்க ஜோராக ஆட்டோவில் வந்தவர்

கும்பகோணம் மாநகராட்சி மேயராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சரவணன் போட்டியின்றி தேர்வானதைத் தொடர்ந்து, ஆட்டோ ஓட்டுநராகப் பணிசெய்யும் அவர் தனது ஆட்டோவில் ஊர்வலமாக வந்து மாநகராட்சி மேயராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

டிரைவர் சரவணன்
டிரைவர் சரவணன்
author img

By

Published : Mar 4, 2022, 8:12 PM IST

தஞ்சாவூர்: கும்பகோணத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் 48 வார்டுகளில் 47 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

இதில், திமுகவின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியிலிருந்த 42 பேர் வெற்றி பெற்றனர். சுயேச்சையாகப் போட்டியிட்டு 3 பேர் வெற்றி பெற்று மாவட்டச் செயலாளர்களும் சட்டப்பேரவை உறுப்பினர்களும் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

இந்த நிலையில், கும்பகோணம் மாநகராட்சியின் மேயர் பதவி காங்கிரஸுக்கு கொடுக்கப்பட்டது. தோழமை கட்சிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இரண்டு இடங்களை வென்ற காங்கிரஸ் கட்சிக்கு கும்பகோணம் மேயர் பதவியை வழங்கி திமுக கௌரவித்துள்ளது.

மேயரான ஆட்டோ ஓட்டுநர்

இதனைத்தொடர்ந்து 17ஆவது வார்டில் வெற்றிபெற்ற காங்கிரஸ் வேட்பாளர் சரவணன் மேயராகப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, இன்று (மார்ச் 4) தனது ஆட்டோவில் சரவணன், மூர்த்தி ரோடு, நால் ரோடு வழியாக சக நண்பர்களுடன் ஜோராக கும்பகோணம் மாநகராட்சி கட்டடத்தை வந்தடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, கைகளுக்கு கிருமி நாசினி தெளித்துக்கொண்டு கூட்ட அரங்கிற்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

கும்பகோணத்தில் மேயர் பதவியேற்ற ஆட்டோ டிரைவர் சரவணன்

போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் சரவணனுக்கு, கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடத்தில் பேசிய சரவணன், 'கும்பகோணம் மாநகராட்சிக்குத் தேவையான அனைத்து தேவைகளுக்கும் முன்னுரிமை கொடுத்து செயல்படுத்துவேன்' என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: மதுரை திமுகவின் இமேஜ் இனி அப்படி இருக்காது - பிடிஆர் குறிப்பிடுவது யாரை?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.