ETV Bharat / state

"பெண்ணாக மதுவிலக்கு குறித்து கனிமொழி இப்படி பேசலாமா" - அன்புமணி ராமதாஸ்

author img

By

Published : Feb 5, 2023, 10:38 AM IST

தமிழ்நாட்டில் பல்லாயிரம் பெண்கள் விதவையாக காரணமாக இருக்கும் மது குறித்து, ஒரு பெண்ணாக திமுக எம்.பி. கனிமொழி, மதுவிலக்கு கொண்டு வர அரசை வலியுறுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அன்புமணி ராமதாஸ் அளித்த பேட்டி
அன்புமணி ராமதாஸ் அளித்த பேட்டி
அன்புமணி ராமதாஸ் அளித்த பேட்டி

தஞ்சாவூர்: கும்பகோணம் செட்டிமண்டபம் புறவழிச்சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று தஞ்சை மாவட்ட பா.ம.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு உரையாற்றினார்.

கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், “பருவம் தப்பிய மழையால் டெல்டா பகுதியில் விவசாயிகள் கடுமையான இழப்பை சந்தித்துள்ளார்கள். அவர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு, 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக தமிழக அரசு வழங்க வேண்டும். ஆனால் தற்போதைய அரசின் நிர்வாகம், அமைச்சர்கள், அனைத்து அரசியல் கட்சிகளின் கவனமும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் உள்ளது.

விவசாயிகளுக்காக தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் தமிழ்நாடு அரசு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க மறுக்கிறது. கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்ட புதிய மாவட்டம் அமைக்கப்பட வேண்டும் என்பது, நீண்ட நாள் கோரிக்கை. இது அவசியமானது நிர்வாகத்திற்கு வசதியாக அமையும், காரணம் தஞ்சை மாவட்டம் பெரிய மாவட்டம்.

ஆன்லைன் சூதாட்ட அவசர சட்டத்திற்கு கையொப்பமிட்ட தமிழ்நாடு ஆளுநர், அதே சரத்துகள் கொண்ட சட்ட மசோதாவிற்கு கையொப்பம் இட மறுப்பது ஏன் என்பதனை விளக்கமளிக்க வேண்டும். இதற்கிடையே இடைப்பட்ட காலத்தில் நம் கண்ணிற்கு தெரிந்து 12 உயிர்கள் போயுள்ளது.

குட்கா நாடு முழுவதும் தடை செய்யப்பட்டு இருந்த நிலையில், சட்டத்தில் உள்ள ஓட்டையை பயன்படுத்தி, அதற்கு நிரந்தர தடை விதிக்க முடியாது, தற்காலிக தடை தான் விதிக்க முடியும் என்ற நீதிமன்ற உத்தரவு கிடைக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளனர். நீதிமன்றம் வெறும் சட்டத்தை வைத்து பார்க்காமல், இதனை எதற்காக கொண்டு வந்தார்கள் என்பது போன்ற அனைத்து கோணங்களிலும் இத்தகைய விசயங்களை ஆய்வு செய்ய வேண்டும்.

ஆனால் தெலங்கானா நீதிமன்றம் மட்டும் அந்த தடையை உறுதி செய்தது. மதுவை காட்டிலும் பெரும் ஆபத்தை விளைவிப்பது குட்கா போன்ற போதை வஸ்துக்கள். இவை தற்போது அமெரிக்காவை அடுத்து தமிழ்நாட்டில் அதிகளவில் புழக்கத்தில் உள்ளது. குறிப்பாக பள்ளி, கல்லூரி வாசல்கள் அருகே எளிதாக கிடைக்கிறது.

கரும்பு விவசாயிகளின் பெயரில் வங்கியில் கடன் பெற்ற, திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் செயல் அதிர்ச்சி அளிக்கிறது. இதில் தொடர்புடைய வங்கி நிர்வாகிகள், அரசுத்துறை அலுவலர்கள், ஆலை நிர்வாகிகள் ஆகியோரிடம் சிபிஐ விசாரணை நடத்தி, தொடர்புயை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.

விவசாயிகள் பல கஷ்டங்களை தாண்டி நெல் மணிகளை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வந்தால், அங்குள்ள ஊழியர்கள் சிப்பத்திற்கு 40 ரூபாய் கையூட்டு கேட்டு பெறுவது மனசாட்சி இல்லாத செயல். அதானி நிறுவனங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம். காரணம் பொதுத்துறை நிறுவனங்களான எல்ஐசி, எஸ்பிஐ போன்றவை அந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது.

இன்றைய தமிழ்நாடு முதலமைச்சர், முன்பு தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம், படிப்படியாக மதுக்கடைகளை மூடுவோம் என்றும், எனது முதல் கையெழுத்து மதுவிலக்கிற்காக இருக்கும் என்று தெரிவித்த நிலையில், அவரது ஆட்சி காலம், 20 மாதங்களை தாண்டி நடைபெற்று வரும் நிலையில், தற்போது வரை ஒரு மதுகடையை கூட மூடவில்லை.

இன்றைய தமிழ்நாடு அரசின் நிர்வாகம் மது விற்பனை மூலம் கிடைக்கும் 36 ஆயிரம் கோடியை வைத்தே நடந்து வருகிறது. இது தான் திராவிட மாடலா" என்றார். மது விலக்கு கொண்டு வருவதாக திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறவில்லை என கனிமொழி கூறியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர்,

“பெண்களின் மனதை உணர்ந்த கனிமொழி இப்படி பேசலாமா. தமிழ்நாட்டில் பல்லாயிரம் பெண்கள் விதவையாக காரணமாக இருக்கும் மது குறித்து பெண்களின் மனதை நன்குணர்ந்த திமுக எம்.பி. கனிமொழி, இந்த விசயத்தில் மனசாட்சியுடன் நடந்து கொண்டு படிப்படியாக மதுக்கடைகளை மூடவும், மதுவிலக்கு கொண்டு வரவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்த வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: "கடலுக்குள் பேனா சின்னம்; அறிவார்ந்த சமூகம் இதை செய்யாது" - சீமான்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.