கடந்த 15 நாள்களாக தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் மத்திய அரசின் சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர். ஆகியவற்றை எதிர்த்து பெரிய பள்ளிவாசல் அருகில் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் இன்று மாலை 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பேரணியாகச் சென்று மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவச் சிலையிடம் மனு கொடுக்கச் சென்றனர். இதையடுத்து காவல் துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.
பின்னர் அங்கிருந்து அவர்களைக் கலைந்து போகச் சொல்லி காவல் துறையினர் அறிவுறுத்தினர். சமாதானம் அடையாத பெண்கள் ஜெயலலிதாவின் சிலைக்கு அருகே மீண்டும் செல்ல முயன்றனர்.
தொடர்ந்து அவர்களைக் காவல் துறையினர் சிலை அருகே செல்ல அனுமதிக்காததால் ஏற்கனவே வைத்திருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திடம் மனு கொடுத்து முழக்கமிட்டனர்.
பின்னர் அவர்கள் கலைந்து தொடர் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றுவந்த இடத்திற்கே திரும்பிச் சென்றனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க : லஞ்சம் வாங்கும் சார் இணைப்பதிவாளர் - பாமகவினர் ஆர்ப்பாட்டம்