ETV Bharat / state

கருணாநிதியின் பேரன் என்பதையும் தாண்டி... உதயநிதி குறித்து அன்பில் மகேஷ்!

கருணாநிதியின் பேரன் என்பதையும் தாண்டி கொள்கை வீரராக உதயநிதி திகழ்ந்து வருகிறார் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

கருணாநிதியின் பேரன் என்பதையும் தாண்டி... உதயநிதி குறித்து அன்பில் மகேஷ்!
கருணாநிதியின் பேரன் என்பதையும் தாண்டி... உதயநிதி குறித்து அன்பில் மகேஷ்!
author img

By

Published : Dec 13, 2022, 3:20 PM IST

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு

தஞ்சாவூர்: விரைவில் அமைச்சராக பொறுப்பேற்க உள்ள சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா நேற்று (டிச.12) மாலை கும்பகோணம் மாநகர திமுக சார்பில் நடைபெற்றது.

கும்பகோணம் மூர்த்தி கலையரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஏழை எளியோர் 500 பேருக்கு எவர்சில்வர் குடங்கள் வழங்கும் விழா மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. இதற்கு தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார். மாநகரச் செயலாளரும், மாநகர துணை மேயருமான சு.ப.தமிழழகன் வரவேற்புரை ஆற்றினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனையடுத்து விழாவில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், “கேக் வெட்டி கொண்டாடினால் அது பர்த்டே பார்ட்டி. நாக்கை வெட்டி கொண்டாடினால் அது பாரதிய ஜனதா பார்ட்டி.

திமுக 73 ஆண்டுகளைக் கடந்தும் இன்றளவிற்கும் புத்துணர்ச்சியுடனும், எழுச்சியுடனும் இருப்பதற்குக் காரணம், கட்சியில் புதியதாக உருவாக்கப்பட்ட இரண்டு அணிகள் உள்பட 22 அணிகள் தான்.

இந்த அணிகளுக்கு எல்லாம் முதன்மையானது இளைஞரணி. இந்த இளைஞரணி செயலாளர் பொறுப்பு அளித்த பிறகு, முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோளின்படி, உதயநிதி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அவர் நிர்ணயித்த இலக்கான, இளைஞரணிக்கு மாநிலம் முழுவதும் 30 லட்சம் இளைஞர்களை இணைக்க வேண்டும் என்ற இலக்கையும் எட்டி சாதனை புரிந்தார்.

அவரை வாரிசு அரசியல் என எதிர்க்கட்சிகள் குறிப்பிட்டாலும், கருணாநிதியின் பேரன் என்பதையும் தாண்டி, அவர் கருணாநிதியின் கொள்கை பிடிப்போடு, கொள்கை வீரராகத் திகழ்ந்து வருகிறார்” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் அரசு தலைமை கொறடா கோவி செழியன், கும்பகோணம் எம்எல்ஏ க.அன்பழகன் மற்றும் தஞ்சாவூர் எம்எல்ஏ துரை சந்திரசேகரன் உள்படப் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: நாளை மறுநாள் அமைச்சராக பதவியேற்கிறார் உதயநிதி ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.