தஞ்சாவூர்: நேற்று இரவு (மே 26) கும்பகோணம் அருகே உள்ள சோழபுரத்தை அடுத்துள்ள அய்யாநல்லூரில் உள்ள மின் மாற்றியிலில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அப்பகுதி மக்கள் சோழபுர மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு பழுதினை நீக்கும்படி முறையிட்டுள்ளனர்.
அய்யாநல்லூர் பொதுமக்கள் முறையிட்டதை தொடர்ந்து கும்பகோணம் அருகே சோழபுரம் மின் வாரிய ஊழியராக பணி புரிந்து வந்த மணிகண்டன் என்பவர் அய்யாநல்லூரில் உள்ள மின் மாற்றியிலில் ஏற்பட்ட பழுதினை நீக்க சென்றுள்ளார்.
அப்போது, மணிகண்டன் பழுதினை சரி செய்து கொண்டிருந்த வேலையில் எதிர்பாராவிதமாக ஒரு மின் வடத்தை கையில் பிடித்துள்ளார் அச்சமயம் அதில் மின்சாரம் வந்துள்ளது, கண் இமைக்கும் நொடியில் மின்சாரம் தாக்கி மணிகண்டன் சம்பவயிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையும் படிங்க: ஊருக்குள் புகுந்து அரிசிகொம்பன் அட்டகாசம்... பொது மக்களை விரட்டும் வீடியோ.. யானையை விரட்ட வனத்துறை போராட்டம்!
இது குறித்து தகவல் அறிந்த சோழபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து உயிரிழந்த மணிகண்டனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக, கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மின் பழுதை சரி செய்ய முயன்றபோது எதிர்பாராவிதமாக மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் உயிரிழந்த சம்பவம் அய்யாநல்லூர் கிராமத்தினர் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் மத்தியில் பெரும் சோகத்தினையும், அதிர்ச்சியினையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மாணவர்களுக்கு ரூ.25ஆயிரம் ஊக்கத் தொகை!.. ‘பொய்யான தகவலை நம்ப வேண்டாம்’ - தஞ்சை மேயர் ராமநாதன்