ETV Bharat / state

விவசாயிகளின் கருத்துக்கு முதலமைச்சர் முக்கியத்துவம் தரவேண்டும் - டிடிவி தினகரன் பேச்சு - அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், விவசாயிகளின் கருத்துகளை கேட்டு எந்த தரப்புக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் நடந்துகொள்ள வேண்டுமென டிடிவி தினகரன் தெரிவித்தார்.

டி.டி.வி. தினகரன்
டி.டி.வி. தினகரன்
author img

By

Published : Dec 12, 2022, 11:06 PM IST

விவசாயிகளின் கருத்துக்கு முதலமைச்சர் முக்கியத்துவம் தரவேண்டும் - டிடிவி தினகரன் பேச்சு

தஞ்சாவூர்: கண்டியூரில் விளை நிலங்கள் மீது சாலை அமைக்கும் திட்டத்தைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திருவையாறு தொகுதியில் வெற்றி பெற்ற திமுக அரசு, அடாதடியான திட்டங்களை செயல்படுத்துவதாக கூறினார். விவசாயப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் சாலை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டிய அவசரம் ஏன் என்றும் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பினார்.

ஆட்சிக்கு வந்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வழக்கம் போல் ஏனோ, தானோ என அடாதடியாக செயல்படுவதை நிறுத்தி விட்டு விவசாயிகளின் கருத்துகளைக் கேட்டு செயல்பட வேண்டும் என்றார்.

மேலும் புறவழிச்சாலை தேவையான திட்டம் என்றாலும் அப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கருத்தையும் கேட்டு யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறினார்.

இதையும் படிங்க: சாமிக்கு பிடிக்கும் குடை துர்கா ஸ்டாலினுக்கு பிடிக்கப்பட்டதா? - சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.