டெல்டா மாவட்டங்களில் ஒன்றான தஞ்சை மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதியில் விவசாயத்தை மட்டுமே நம்பி பலரும் வாழ்ந்து வருகின்றனர்.
பல ஆண்டுகளாக இந்த பகுதிக்கு வரும் காவிரி நீரை நம்பி மூன்றுபோகம் விவசாயம் செய்து வந்தநிலையில், கடந்த சில ஆண்டுகளாக காவிரி நீர் கனவு நீராக மாறியது. மழையும் கைவிட்டதால், மூன்றுபோகம் ஒருபோகமானது. இதனால் தஞ்சை மாவட்டத்தின் கடைமடைப் பகுதியில் விவசாயம் என்பது கொஞ்சம் கொஞ்சமாக பொய்த்து போனது.
மழை நீரை நம்பி மட்டுமே ஒருசில இடங்களில் விவசாயிகள் விவசாயம் செய்துவந்தனர். இந்நிலையில் நான்காண்டிற்கு பிறகு கடைமடை பகுதியை காவரி நீர் சேர்ந்ததால் பட்டுக்கோட்டை, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது விவசாயிகள் உழவு பணிகளை தொடங்கியுள்ளனர்.
உரிய நேரத்தில் காவிரி நீர் கடைமடைப் பகுதிக்கு வந்துள்ளதால் சம்பா சாகுபடியை செய்துவிடமுடியும் என்ற நம்பிக்கையில் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: வேளாண் ஒப்பந்தச் சட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு!