தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் பிள்ளையார் கோயில் தெருவில் வசித்து வந்த ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியிலிருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள 10 கிராமங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளிலிருந்து வெளியில் செல்லவோ அல்லது மற்ற பகுதியிலிருந்து இப்பகுதிக்குள் உள்ளே வரவோ தடை விதிக்கப்பட்டு ஆங்காங்கே தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் அந்தந்த தடுப்புப் பகுதிகளில் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதவிர அதிராம்பட்டினம் நகர்ப்பகுதியில் நோய்த் தொற்று மேலும் பரவாமல் இருக்க கிருமிநாசினிப் பொருள்கள் தெளிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல ஊரணிபுரம் காமராஜர் நகர் பகுதியில் வசித்து வந்த ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் ஊரணிபுரம் நகர் பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகள் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திருவாரூரில் ஊரடங்கு உத்தரவை மீறிய 3,144 பேர் கைது!