ETV Bharat / state

வருமானம் ஈட்ட நல்ல வாய்ப்பு... தேங்காய் ஓட்டில் கைவினைப்பொருட்கள் செய்து அசத்தும் கலைஞர்! - more profitable business

தஞ்சாவூரில் தேங்காய் ஓட்டில் (கொட்டாங்குச்சி) அழகிய கைவினை கலைப் பொருட்கள் தயாரித்து அசத்தி வரும் கைவினைக் கலைஞர் குமரகுரு என்பவரின் பணி குறித்து விளக்குகிறது, இந்த சிறப்புத் தொகுப்பு...

Thanjavur
தேங்காய் ஓட்டில் கைவினை பொருட்கள்
author img

By

Published : May 11, 2023, 3:23 PM IST

தேங்காய் ஓட்டில் கைவினைப் பொருட்கள் செய்து அசத்தும் கலைஞர்!

தஞ்சாவூர்: தஞ்சையில் உள்ள புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் வசித்து வருபவர், கைவினைக் கலைஞர் குமரகுரு (61). இவர் சிறுவயதில் இருந்தே ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்டுள்ளார். அந்த ஆர்வத்தில் தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அரசு கவின் கலை கல்லூரியில், வணிக வரைகலை பயின்றுள்ளார்.

இவரது தந்தை நில அளவைத்துறையில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த நிலையில், உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். அதனையடுத்து, கருணை அடிப்படையில் குமரகுருவிற்கு அரசு வேலை கிடைத்துள்ளது. அதைத் தொடர்ந்து, இவர் சுமார் 30 ஆண்டுகள் காலம் அரசு பணியைப் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் குமரகுருவிற்கு ஏற்பட்டுள்ளது.

ஆகையால், அரசு வேலையில் இருந்து விருப்ப ஓய்வுபெற்று,தற்போது கைவினைத் தொழில் செய்து வருகிறார். தேங்காய் மற்றும் தேங்காய் ஓடுகளை சந்தைகளில் தரம்பிரித்து வாங்கி, அவற்றை இயந்திரத்தின் மூலம் கட்டிங் செய்து, பின்னர் தேங்காய் ஓடுகளை பாலிஷ் செய்து, கைவினை கலை பொருட்களுக்குத் தேவையான பூ டிசைனை உருவாக்கி, அவரின் எண்ணத்திற்கு ஏற்ப கலை நயமிக்க பொருட்களை உருவாக்கி வருகிறார்.

தேங்காய் ஓடுகளை மட்டுமே கொண்டு, அழகிய அலங்காரப்பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்களான தேனீர் கப், ஜார், கரண்டி, பர்ஸ், கீ செயின் மற்றும் அலங்கார அணிகலன்கள் ஆகியவை தயாரிக்கப்படுகின்றன இதுவரை, இவருடைய கைவினைப் பொருட்கள் கனடா, ஆஸ்திரேலியா ஆகிய வெளிநாடுகளுக்கும் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

மேலும் மத்திய, மாநில அரசின் கைவினைப் பொருட்கள் கண்காட்சியிலும் இவருடைய கலைப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் கைவினைக் கலைஞர் (தேங்காய் ஓடு கலைப்பொருட்கள்) என்ற அடையாள அட்டையும் பெற்றுள்ளார். இவருடைய கலைப் பொருட்கள் முழுக்க முழுக்க இயற்கை முறையிலான பொருட்களைக் கொண்டு (தேங்காய் ஓடு, குச்சி) மட்டுமே, எந்த விதமான ரசாயன பூச்சும் இல்லாமல் தயாரிக்கப்படுகிறது.

மத்திய மற்றும் மாநில அரசுகள் மூலம் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் சுமார் 700 நபர்களுக்கு கைவினை கலைப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சியினையும் இவர் வழங்கி உள்ளார். இதுகுறித்து தொழில் முனைவோர் குமரகுரு என்பவர் கூறும்போது, ''சிறு வயதிலிருந்தே ஓவியத்தின் மீது உள்ள ஆர்வத்தால் அரசுப் பணியிலிருந்து விருப்ப ஓய்வுபெற்று சுயமாக கைவினை கலைப்பொருட்கள் தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன்.

மேலும் புதுமையான முயற்சியாக செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், வீணாகும் தேங்காய் ஓட்டிலிருந்து அழகிய கலைப்பொருட்கள் தயாரித்து விற்பனை செய்து வருகின்றோம். மேலும் இதற்காக மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு விருதுகள் பெற்றுள்ளேன். அரசு சார்பில் ஏராளமான உதவிகள் செய்யப்படுகின்றன'' என்றும் தெரிவித்தார்.

''தமிழ்நாட்டில் இளைஞர்களிடம் கற்றுக் கொள்ள ஆர்வம் குறைவாக உள்ளது. ஆனால், வெளி மாநிலங்களில் நிறைய பயிற்சிகளை அளித்துள்ளேன். எனவே, இளைஞர்களுக்கு இது வாய்ப்புள்ள நல்ல கலை, அவர்களின் திறமையின் மூலம் அதிக வருமானம் ஈட்ட முடியும்'' என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கொதிக்கும் சோற்றை தலையில் அடித்து சாமியாட்டம்.. கள்ளவாண்ட கோயில் திருவிழா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.