ETV Bharat / state

நிமிடங்களில் உலக நாடுகளை தோலுறிக்கும் 7வயது சிறுவன்.. சோழன் உலக சாதனை புத்தகம் அங்கீகரிப்பு! - united nations

தஞ்சாவூரில் நிவின் பங்கஜ் 7 வயது என்ற சிறுவன் ஐ.நா. அங்கீகாரம் பெற்ற 195 நாடுகளின் தேசியக் கொடிகளைப் பார்த்து நாட்டின் பெயர், தலைநகர் மற்றும் நாணயம் ஆகியவற்றைக் கூறி சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 15, 2023, 9:35 PM IST

உலக சாதனை படைத்த 7வயது சிறுவன்

தஞ்சாவூர் மாவட்டம், சரபோஜி கல்லூரி பகுதியை சேர்ந்தவர் வினோத் குமார். இவரது மனைவி வைஷ்ணவி. இருவருக்கும் நிவின் பங்கஜ் (7) என்ற மகன் உள்ளார்.

வினோத் குமார் வெளிநாட்டில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மேலும், நிவின் பங்கஜ் 3ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பள்ளி விடுமுறை நாளில் சொந்த ஊரான தஞ்சாவூர்க்கு வினோத்குமார் தனது மனைவி மற்றும் மகனுடன் வந்துள்ளார்.

இந்நிலையில் சிறுவன் நிவின் பங்கஜ் கடந்த 8 மாதங்களாக ஐ.நாவால் அங்கீகாரம் பெற்ற 195 நாடுகளின் தேசிய கொடிகளைப் பார்த்து அவற்றின் தலைநகரங்கள் மற்றும் நாணயங்கள் போன்றவற்றை மிக குறைந்த நிமிடத்தில் சொல்வதற்கு பயிற்சி எடுத்துள்ளார்.

இதைப் பார்த்த வினோத்குமார் வீடியோவாக பதிவு செய்து சோழன் உலக சாதனை புத்தக அமைப்பிற்கு அனுப்பினார். இதைத்தொடர்ந்து ஆய்வு செய்த சோழன் உலக சாதனைப் புத்தக அமைப்பினர் இந்த சாதனையை பதிவு செய்ய ஒப்புதல் அளித்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து இந்த சாதனை நிகழ்வு சின்னக்கடைத் தெரு பகுதியில் அமைந்துள்ள சக்திவிநாயகர் அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளியில் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி நடந்தது.

இந்நிகழ்வில் சோழன் உலக சாதனை புத்தக அமைப்பு நிறுவனர் முனைவர்.நீலமேகம் நிமலன், பொது செயலாளர் ஆர்த்திகா நிமலன், தஞ்சை மாவட்டப் பொதுத் தலைவர் முனைவர் சந்தானசாமி ஆகியோர் நடுவர்களாக இருந்த நிலையில் சிறுவன் நிவின் பங்கஜ் 5.53 விநாடியில் 195 உலக நாடுகளின் பெயர், அவற்றின் தலைநகர் மற்றும் நாணயத்தின் பெயர் ஆகியவற்றை சரளமாகக் கூறி சாதனை படைத்தார்.

அதனைத் தொடர்ந்து இந்த சாதனை நிகழ்வு சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்று அதற்கான சான்றிதழ், பதக்கம் மற்றும் விருது ஆகியவை சிறுவனுக்கு வழங்கப்பட்டது. மேலும், பள்ளி மாணவர்கள் இது போன்று சாதனை படைக்க வேண்டும் எனவும், பள்ளி மாணவர்களும் உலக நாடுகளின் கொடிகள், நாணயங்கள், தலைநகரங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் இந்த சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இது குறித்து சிறுவன் நிவின் பங்கஜ் கூறுகையில், "கடந்த எட்டு மாத காலமாக பயிற்சி பெற்றுள்ளேன் எனவும், முதலில் நாடுகளின் பெயர்களை தெரிந்து கொண்டேன் அதன்பின் அவற்றின் தலைநகரங்களை தெரிந்து கொண்டு பின்னர் நாட்டின் நாணயங்களைப் பற்றி தெரிந்து கொண்டு குறைந்த நிமிடத்தில் தெரிவிக்கும் விதமாக பயிற்சி பெற்று தற்போது சாதனை படைத்து சோழன் உலக சாதனை சான்றிதழ் விருது பெற்றுள்ளேன்" என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார். இதில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

இதையும் படிங்க:Independence Day 2023: இந்தியாவின் ஜவுளி பாரம்பரியத்தைக் கவுரவித்த கூகுள் டூடுல்.!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.