தஞ்சாவூர்: திருவையாறை அடுத்த வடுகக்குடியைச் சேர்ந்த மகாராஜன் என்பவரின் மகன் மதியழகன். தஞ்சை மாவட்ட வாழை உற்பத்தியாளர் சங்கத்தலைவராக இருந்துவரும் இவர், 35 ஏக்கரில் வாழை சாகுபடி செய்துவருகிறார்.
கரோனா காலத்தில் மக்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்யவேண்டும் என்று எண்ணிய அவர், திருவையாறு அடுத்த கடுவெளியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா ஆதரவற்ற முதியோர் இல்லத்திற்கு, இன்று(ஜூன்.1) 1 டன் வாழைப்பழங்களையும், சமையலுக்காக 300கிலோ மொந்தன் வாழைக்காய்களையும், 1,000 வாழை இலைகளையும் இலவசமாக வழங்கினார். இவரது சேவையை முதியோர் இல்லத்தில் உள்ள அனைவரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 2,000 ஆதரவற்றவர்களுக்கு நாள்தோறும் உணவு வழங்கும் தொண்டு நிறுவனங்கள்