தஞ்சை : தனியார் பேருந்துகள் செல்வதற்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்படுகின்றன. இந்நிலையில் தஞ்சை புதிய பேருந்தில் நின்று கொண்டிருந்த இரு தனியார் பேருந்து ஓட்டுனர்கள் இடையே யார் முன் செல்வது என்பது தொடர்பாக பிரச்சனை எழுந்துள்ளது.
அப்போது ஏற்பட்ட மோதலில் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர், பின்புறம் நின்று கொண்டிருந்த மற்றொரு பேருந்து மீது ரிவர்ஸ் எடுத்தபடி மோதினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது பொதுமக்கள் யாரும் குறுக்கே செல்லாமல் இருந்ததால் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதையும் படிங்க: சூட்கேஸில் சடலமாக இளம்பெண் - ஆணவக்கொலை செய்ததாக தந்தை வாக்குமூலம்!