ETV Bharat / state

எரிந்த நிலையில் இளைஞர் சடலம் மீட்பு!

தஞ்சாவூர்: சேதுபாவாசத்திரம் பகுதியில் உடல் எரிக்கப்பட்ட நிலையில் இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

a body rescue in burned at tanjore
a body rescue in burned at tanjore
author img

By

Published : Apr 30, 2020, 10:00 AM IST

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் பிள்ளையார்திடல் அருகிலுள்ள மயானத்தில் இளைஞரின் உடல் பாதி எரிந்த நிலையில் சடலமாகக் கிடப்பதாகக் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியதில், தலை மட்டும் எரியாமல், உடல் பகுதி முழுவதும் எரிந்த நிலையில் இருந்துள்ளது. அவரது அருகில் பை ஒன்றும் கிடைத்துள்ளது. காவல் துறையினர் அந்தச் சடலத்தைக் கைப்பற்றி, இறந்தவர் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதே சமயத்தில் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, கழிச்சி அம்மன் குளக்கரை பகுதியில் வசித்துவரும் காளியம்மாள் தனது மகன் கண்ணனைக் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

37 வயதான கண்ணன், வெளியில் சென்றுவருவதாகத் தன்னிடம் கூறிச் சென்றதாகவும் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை எனவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, காவல் துறையினர், காளியம்மாளை இறந்தவரின் உடலை அடையாளம் காண அழைத்துச் சென்றனர். முகம் தீயில் கருகாமல் இருந்ததையடுத்து, கிடைக்கப்பெற்ற சடலம் கண்ணனுடையது என அடையாளம் காணப்பட்டது. பின்னர், காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் பார்க்க:கரோனா பீதி: துபாய்க்கே திருப்பி அனுப்பப்பட்ட இந்தியரின் சடலம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.