தஞ்சாவூர் மாவட்டம் துலுக்கம்பட்டி நாடார் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (35) என்பவர் கடந்த மாதம் நவம்பர் 24ஆம் தேதி முன் விரோதம் காரணமாக அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யபட்டார்.
இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை செய்ததில் அதே ஊரைச் சேர்ந்த முரசொலி (30), சுபாஷ் சந்திரபோஸ் (22), ராஜா (31) ஆலங்குடி பகுதியைச் சேர்ந்த அஜீத்குமார் (33), சதீஷ்குமார் (21), அசோக் (29), அய்யப்பன் (20), கடகடப்பை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (27), மேலும் தஞ்சாவூர் செவ்வப்ப நாயக் கன்வாரி கீழ்கரைமணி (27) ஆகியோரை கைதுசெய்தனர். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் மீது ஏற்கனவே ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.
இவர்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் பரிந்துரையின் பேரில் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் உத்தரவிட்டார். இதன்பேரில் சந்திரபோஸ், அசோக், அய்யப்பன், அஜீத்குமார், சதீஷ்குமார், மணிகண்டன், மணி, ராஜா, முரசொலி, சுபாஷ் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து திருச்சி மத்திய சிறையிலடைத்தனர்.
இதையும் படிக்க: வங்கதேச எல்லையில் கடத்தப்படும் கால்நடைகள்!