தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகரில் 144 தடை உத்தரவை அடுத்து பல்வேறு வணிக வளாகங்கள், மின்னணு கடைகள் அனைத்தும் பூட்டப்பட்ட நிலையில், பட்டுக்கோட்டை அய்யா திரையரங்கம் எதிர்புறம் உள்ள எஸ்கேவி. எலக்ட்ரானிக்ஸ் கடையானது, 144 தடை உத்தரவை மீறி திறந்து வியாபாரம் செய்வதாக நகராட்சி அலுவலர்களுக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்ற நகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் 144 தடை உத்தரவை மீறி இயங்கிவந்த காரணத்தினால் அக்கடையைப் பூட்டி சீல்வைத்தனர்.
இதேபோல வட்டாட்சியர் அருள்பிரகாசம் ஆய்வு மேற்கொண்டபோது, விதிகளை மீறி திறந்துவைக்கப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட கடைகளைக் கண்டறிந்து அந்தக் கடைகளைப் பூட்டி சீல்வைத்தார்.
இதையும் படிங்க: ஊரடங்கால் 300 கோடி இழப்பு - ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம்!