நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே தெற்கு பாப்பான்குளம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் ராஜா. இவர் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்துள்ள திருவேங்கடம் அருகே உள்ள குண்டம்பட்டியில் கல் அரைக்கும் கிரசர் இயந்திரத்தில் ஆப்பரேட்டராக பணிபுரிந்துவருகிறார்.
இந்நிலையில், இவர் பணியில் ஈடுபட்டிருந்தபோது இயந்திரத்தில் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த திருவேங்கடம் காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இச்சம்பவம் குறித்து திருவேங்கடம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: இருசக்கர வாகன விபத்தில் நால்வர் உயிரிழப்பு : உறவினர்கள் தர்ணா போராட்டம்